பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 "பன்னிரண்டு திருக்கரங்களால் சாப்பாணி கொட்டிய சண்முக நாதா, ஐந்து பகைவர்களால் என் மனம் சுழன்று கொண்டே இருக்கிறதே! இதைக் காப்பாற்ற மாட்டாயா? என் மனம் உன் திருவடிகளில் தூங்கும்படியாகச் செய்ய மாட்டாயா?" என்ற குறிப்புள்ள பிராத்தனையை அருணகிரியார் வழங்கும் பாட்டில் நாம் தெரிந்து கொள்ளலாம். குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்படைந்த இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாய்;இரு நான்கு வெற்பும் அப்பாதி யாய்விழ மேரும் குலுங்கவிண் ணாரும் உய்யச் சப்பாணி கொட்டிய கைஆ றிரண்டுடைச் சண்முகனே! (பூமியில் பாசத்தினாற் கட்டப்பட்ட வாழ்க்கையில், கூத்தாடும் ஐம்பொறிகளால் சுழற்சி அடைந்த இந்தப் பாசமயமான நெஞ்சையுடைய எளியேனை நற்கதி அடையச் செய்வாய்; எட்டு மலைகளும் அங்கங்கே அந்த அந்தப் பாதியாய்த் துண்டுபட்டு விழவும், மேரு மலையும் குலுங்கவும், தேவர்கள் உய்யவும் சப்பாணி கொட்டிய பன்னிரண்டு கைகளை உடைய ஆறுமுகப் பெருமானே! கு - உலகம். ஐவர் - ஐம்பொறிகள். கொட்பு - சுழற்சி.) 3C)