பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 எப்படிச் சொல்கிறார்? 'மகாபலியிடத்தில் மூன்றடி நிலம் கேட்டு, பிரபஞ்சமாகிய அண்டத்தின் முகடு முட்டும்படியாகப் பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு தம்முடைய பெரிய அடி ஒன்றினாலே பூமியையும், மற்றோர் அடியாலே வானத்தையும், மூன்றாவது அடியாலே மகாபலியின் தலையையும் அளந்த பெருமானுடைய மருகனாகிய முருகன், மயிலின் மேலே ஏறும் போது தன்னுடைய சிற்றடி அதன் மேல் படும்படி செய்தான். முப்பத்து முக்கோடி தேவர்களுடைய தலைமீது தன் சிற்றடி படும்படியாகச் செய்தான். தேவர்களுடைய சிரத்திற் பட்டது கிடக்கட்டும். அந்தச் சிற்றடி "என் பா அடி ஏட்டிலும் பட்டது" என்று சொல்கிறார். இதுதான் அவரது சொந்த அநுபவம். அடி ஏடு ஒருவர் அருணகிரியாரைப் பார்த்து, "நீங்கள் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிக் குவிக்கிறீர்களே; அது எப்படி முடிகிறது? அற்புதமான திருப்புகழைச் சந்தம் பிறழாமல் பாடும் ஆற்றல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? கங்கையாற்று வெள்ளம் போலல்லவா பாட்டு உங்கள் வாக்கிலிருந்து பொங்குகிறது?" என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் கேள்விக்கு விடை அளிப்பதைப் போல இங்கே அருணகிரியார் பாடுகிறார். 'என்ன அப்பா சொன்னாய்? நானா பாடுகிறேன்? நான் எழுதுகிற பாக்கள் எல்லாம் உயர்ந்தன என்றா புகழ்கின்றாய்? இந்தப் புத்தகத்தைப் பார்த்தாயா? இதன் அடி ஏட்டிலே விழுந் திருக்கும் முத்திரையைப் பார்?' என்று காட்டுகிறார். ஒரு வியாபாரியிடம் சென்று, "என்ன ஐயா, இந்த ஆண்டு லட்சக்கணக்கான லாபம் சம்பாதித்திருக்கிறாயே! உன் கணக்குப் புத்தகத்தில் இவ்வாண்டு முதல் முதலில் யாருடைய பெயரில் வரவு வைக்கப்பட்டது?’ என்றால் அவர் என்ன சொல்கிறார்? "என் அம்மாவின் பெயரைப் போட்டு முதலில் வரவு வைத்தேன்' என்று சொல்கிறார். அதே மாதிரியாக அருணகிரியார் சொல்கிறார். "இவற்றை எல்லாம் நானா பாடினேன்? என்னுடைய பாக்களின் அடி ஏட்டைப் பார்த்தாயா? மஞ்சள் குங்குமம் தடவினாற்போல, 40