பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 நம்மிடம் உள்ள செல்வத்ப்ை பறித்துப் போவார்களோ தெரியாது. அதற்குள் யார் கண்ணிலும் படாத ஒர் இடத்திற்கு நாம் போய் விட வேண்டும்" என்கிறார். மடியில் கனம் உள்ளவர் அல்லவா? அப்படி அழைப்பது போல ஒரு பாடலைப் பாடுகிறார் அருணகிரியார். இங்கே பையன், மனம். வைரம், முத்து அடங்கிய முடிச்சுத்தான் ஞானம். பெரியவர், ஆத்மா. ஆத்மாவாகிய பெரியவர் தம்மிடம் உள்ள ஞான முடிச்சைக் காப்பாற்றிக் கொள்ள மனம் என்னும் பையனிடம் அதைக் கொடுத்து, 'முருகனாகிய வேலா யுதனது துணை கொண்டு அல்லும் பகலும் இல்லாத, சூதானது அற்ற, வெளிக்கு ஓடிப்போய் ஒளிந்து கொள்ளலாம், வா!' என்று அழைக்கிறார். வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைப் பாதார விந்தம் அரணாக அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச்சும் மாஇருக்கப் போதாய், இனிமன மேதெரி யாது.ஒரு பூதர்க்குமே. மனக் குரங்கு நம்முடைய மனம் நல்ல வழியைக் காட்டினாலும் காட்டும்; அல்லாத வழியைக் காட்டினாலும் காட்டும். அது குரங்கு போன்றது. குரங்கு சிட்டுக் குருவிகள் கட்டுகிற கூட்டைப் பிரித்து எறியும். மாலைகளைப் பிய்த்து எறியும். கட்டியதைப் பிரித்து எறியும் இயல்புடைய குரங்குகளை ஆட்கொண்டான் இராமன். அந்தக் குரங்குகள் குரங்கரசனாகிய சுக்கிரீவனது தலைமையில், ஆங்காங்கே சிதறிக் கிடந்த கற்களை எல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டு வந்து இலங்கைக்கு அணை கட்டின. கட்டியதைப் பிரிக்கும் இயல்புடைய குரங்குகள் இராமனோடு சேர்ந்தமையால் பிரிந்த வற்றை ஒன்று சேர்த்துக் கட்ட உதவின. அவ்வாறே மனம் என்னும் குரங்கு தன் விருப்பப்படி திரிந்தால் நாம் நல்ல எண்ணங்களைக் கட்டக் கட்ட அவற்றைக் குலைத்து, செய்கின்ற 68