பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 'வழுக்கி விழினும் திருப்பெய ரல்லால் மற்று நான்அறியேன்மறு மாற்றம் ஒழுக்க என்கனுக் கொருமருந் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே' பழக்கமும் தியானமும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இருந்த பழக்கம் நமக்கும் இருந்தால் துன்பப் படும்போதும், இன்பம் அடையும்போதும் முருகா முருகா என்று சொல்ல வரும். இந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ந்துவிட்டால் மனம் இறைவனுடைய தியானத் தில் ஒன்றிவிடும். பல காரியங்களைச் செய்து துன்பப்படும் போதும், இந்திரியங்கள் வாயிலாக இன்பத்தை அடையும் போதும், காம நுகர்ச்சியில் ஈடுபடும்போதும் இறைவனைப்பற்றிய நினைப்பு மாறாது. அருணகிரியார் இத்தகைய அநுபவத்தை இந்தப் பாட்டில் சொல்கிறார். இறைவன் படத்தை வைத்துப் பலர் தியானம் செய்கிறார்கள். கோயிலுக்குச் சென்று இறைவன் திருவுருவத்தைக் கண்டு பலர் ஆனந்தம் அடைகிறார்கள். அந்தச் செயல்களால் இறைவனுடைய திருவுருவத்தை மனத்தில் அமைத்துக் கொள்ளப் பார்ப்பது நல்லதுதான். ஆனால் இறைவனுடைய திருக்கோலம் முழுவதும் அப்படியே நம்முடைய நெஞ்சில் நிலைத்து நிற்பது அரிது. அப்படி நின்றாலும் நெடுநேரம் இராது. எளிதில் நினைப்பதற்கு ஒன்று இருந்தால் அது அநுகூலம் அல்லவா? அருணகிரிநாதப் பெருமான் இதில் அத்தகைய எளிய தியானப் பொருளைச் சொல்லித் தருகிறார். ஆண்டவன் கையில் இருக்கிற வேலாயுதத்தை மிக எளிதில் நினைந்து தியானிக்கலாம். அதனால் அருணகிரியார், 'வேல் மறவேன்' என்கிறார். எளிய முறை நாம் முருகனைப் பற்றி எத்தனை கேட்டாலும் எத்தனை படித்தாலும் நம்முடைய வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் தினமும் சாதனை செய்தே தீரவேண்டும். எந்தக் காரியமும் பழக்கம் இல்லாமல் அநுபவத்தை உண்டாக்காது. இறைவனைப் பற்றிப் பலகாலம் பேசி, பலகாலம் கேட்டு, பலகாலம் படித் திருந்தாலும் அவற்றினால் சிறிதேனும் அநுபவம் இல்லா SO