பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 இதற்குக் காரணம் அவர் பலவீனம் அல்ல; தமக்குக் கிடைத் துள்ள இன்பத்தின் மீதுள்ள தீவிரமான பற்றே. இந்த ஆத்மாது பவம் கூற்றுவன் வருங்கால் தளர்ந்து விடுமோ என்ற பயம் உண்டாகிறது. மிகவும் அருமையான பொருள் ஒன்றைப் பற்றிக் கொண்டவன், காற்று அசைந்தாலும் அது போய்விடுமோ என்று அஞ்சுவான். குழந்தை சற்றே வெளியில் போனாலும் அதற்கு ஏதேனும் ஊறுபாடு உண்டாகுமோ எனத் தாய் அஞ்சுவது, அவளுக்கு அக்குழந்தையிடத்தில் உள்ள பற்றுக்கு அறிகுறி. இதுபோலவே இறைவன் திருவருளைப் பெற்றாலும் கூற்றுவன். வருங்கால் துன்பம் உண்டாகுமோ என்று அஞ்சுவதற்குக் காரணம் தாம் பெற்ற அநுபவத்திலுள்ள பெரும் பற்று. இன்பமும் துன்பமும் கூற்றுவனைக் கண்டு துன்பப்படுவது கிடக்கட்டும். ஒவ் வொரு நாளும் மனிதன் படுகிற துன்பங்கள் பல. மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்தே வருகின்றன. ஆனால் பொதுவாக மனிதர்களைக் கேட்டால் துன்பம் அடைவ தாகவே சொல்கிறார்கள். தனியாக இன்பத்தை அநுபவிப்பவர் களும் இல்லை; தனியாகத் துன்பத்தை அநுபவிப்பவர்களும் இல்லை. இன்ப துன்பங்கள் கலந்து கலந்து வருகின்றன. குழந்தை இறந்துவிட்டது என்று துன்பப்படுகிறார்கள். அதை அடக்கம் செய்துவிட்டு வந்து சாப்பிடுகிறார்கள். சாப்பிடும்போது பசி தீருகிறது. பசி தீருவதும் ஒருவகை இன்பந் தான். குழந்தை இறந்துவிட்ட துன்பத்திற்கு இடையே பசி தீருகிற இன்பம் வரு கிறது. துன்பம் மிகுதியாக இருப்பதனால் பசி தீருகிற இன்பம் மறைந்து விடுகிறது. - துன்பம் மிகுதியாக இருப்பதனால் மனித வாழ்க்கையே துன்பம் தருவது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்த வாழ்வில் எப்போதும் இன்பமாக உள்ள நிலை ஒன்றைப் பெறலாம் என்று அப்பர் சுவாமிகள் முதலிய பெரியவர்கள் சொல்கிறார்கள். இறைவன் திருவருளைப் பெற்றால் சுகத்திற்கும் துக்கத்திற்கும் அப்பாலுள்ள இருளுக்கும் ஒளிக்கும் அப்பா லுள்ள, நினைப்பு மறப்புக்கு அப்பாலுள்ள ஒருவகை இன்பம்

  1. OC