பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளும் கோளும் வினைதான் என் செயும்?. குமரேசர் S S S S S S S S S CCCC S S S S CCS S C S C S S S S S S S S S S S S S S Sசண்முகமும் எனக்கு முன்னே வந்து தோன்றி.டினே! அடுத்தபடி நமக்குத் துன்பத்தைத் தருவன கோள்கள். அவனுடைய பன்னிரு தோளும் அவற்றில் அணிந்துள்ள கடம்ப மாலையும் நம் முன்னே வந்து தோன்றினால் அந்தக் கோள் களினால் வரும் துன்பம் போய்விடும். கோள் என்செயும் S S S S S S S S S S S C C CS S CS S S S S S S S S S C S Y C S S S S S S CC குமரேசர். தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே! எல்லாத் துன்பங்களுக்கும் தலையாய துன்பமாக வாழ்வின் முடிவில் கூற்றுவன் வரும்போது அந்தத் துன்பத்தைப் போக்கு வதற்கு வழி என்ன? அப்போது குமரேசரின் தாளும், தோளும், சண்முகமும் முன்னே வந்து தோன்றும். அவனுடைய திருக் கோலம் முழுவதும் தோன்றினால் கூற்றுவனால் வருகிற துன்பம் இல்லையாகும். கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே? எப்படித் தியானிப்பது? இந்தப் பாட்டில் முருகப் பெருமானை எப்படித் தியானிப் பது என்பதை அருணகிரியார் சொல்கிறார். இத்தகைய பாடல் களைக் கேட்பதன் பயனே அதுதான். தியானம் நிலை பெற வேண்டு மானால் அந்தப் பெருமானுடைய திருவுருவத்தைத் தாரணை செய்து கொள்ள வேண்டும். ஆறுமுகப் பெருமானுடைய திரு வுருவத்தை மனத்திலே இருத்திக் கொள்வதற்காகவே திருவடியில் இருந்து மெல்ல மெல்ல அவனுடைய திருவுருவத்தை வருணித்துச் சொல்கிறார் அருணகிரியார். குருக்கள் தீபாராதனை காட்டுவது போல அமைந்திருக்கிறது பாட்டு. இந்தப் பாட்டைச் சொல்லும் போதே முருகப்பெருமானின் திருவுருவம் நம் மனக்கண்முன் வரவேண்டும். இறைவனைத் திருக்கோயிலில் கண்டு, அவனது தாளையும் தோளையும் சண்முகத்தையும் கண்ணாரத் தரிசித்து, பாட்டையும் பாடிப் பழக வேண்டும். பின்பு இறைவனுடைய 111