பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 களுக்கு எம்பெருமான் தாய்ப்பன்றியாக உருவெடுத்துப் பால் கொடுத்தான் என்பது அந்த வரலாறு. எம் பெருமானின் கருணை எந்தக் கடை நிலத்திற்கும் இறங்கி வரும் என்பதை இந்தக் கதையினால் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எம்பெருமான் கீழே இறங்குவதால் அவனுக்கு மாசு ஏற்படாதா எனச் சிலர் கேட்கலாம். ஒருவன் கிணற்றில் விழுந்து விட்டான். மற்றொருவன் அவனைத் தூக்கக் கிணற்றிலே குதிக் கிறான். முன்னவன் விழுந்ததும், பின்னவன் விழுந்ததும் ஒன்றா குமா? முன்னவன் தற்கொலை செய்து கொள்ள வேண்டு மென்றோ, கிணறு இருக்கிறது என்று அறியாமையினாலோ விழுந்திருக்கலாம். பின்னவன் அவனைக் காப்பாற்ற வேண்டு மென்ற கருணையினால் விழுகிறான். அப்படி நாம் இருக்கும் கடை நிலைக்கு எம்பெருமான் இறங்கி வந்தாலும் நம்மைப் போல அவன் மாசுபட மாட்டான். தன்னுடைய கருணை மிகுதி யினாலே அவன் இறங்கி வருகிறான். நமக்காக உத்தியோகம் பார்க்கும் மூன்று முர்த்திகளுக்கு வேலை இல்லாமல் போகக் கூடாதே என்றோ என்னவோ நாம் பலவிதமான பாவங்களைச் செய்து பிறந்து, உழன்று, செத்துக் கொண்டே வருகிறோம். முடிவில்லாப் பிறவிக் கடலில் ஆழ்ந்து, எல்லையில்லாத் துன்பத்தை அநுபவித்து வருகின்ற நமக்கு உய்வு அருளித் தேவர்களுக்குக் கிடைக்காத அமிருதத்தை ஊட்டி நம்மைப் பிறக்காமல், உழலாமல், சாகாமல் செய்கின்ற ஒருவன் இருக்கிறான். அவனுடைய செயல், தேவர்களுக்கு மாத்திரம் அமிருதம் கொடுத்த செயல் போன்றது அல்ல. ஏதோ ஒரு காலத் தில் கொடுப்பான் என்பதும் அன்று. நேற்றைக்கும் கொடுத்தான்; இன்றும் கொடுக்கிறான்; நாளைக்கும் கொடுப்பான். யாருக்கும் கொடுப்பான். ஆயிரம் பேராக வந்து, வரிசையாக உட்கார்ந்தால் தான் கொடுப்பேன் என்று பிகு பண்ணிக் கொள்பவன் அல்ல. ஒருவன் வந்தாலும் கொடுப்பான்; பலர் வந்தாலும் அருள்வான். வேண்டுகிற பேர்களுக்கு வேண்டிய வண்ணம் கொடுப்பான். தேவர்களுக்கு அமிருதம் கொடுத்துப் பழகிய மாமாவின் மருகன் ஆகிய அவன் உலகத்திலுள்ள ஆன்மாக்களுக்கு நிரதிசய இன்பத்தை அளிக்கும் அருளாகிய அமிருதத்தை வேண்டும்போது கொடுக்கும் வள்ளலாக இருக்கிறான். 14C