பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் ஏறிய மாணிக்கம் என்னை உன்னில் ஒன்றாய் விதித்து. 'நான் வேறு, நீ வேறு என்று வேறுபடுத்தாமல், என்னையே உன்னில் ஒன்றாகக் கலந்து, ஒன்றுபட விதிக்க வேண்டும்.' ஆண்டு அருள் தரும் காலம் உண்டோ? "அப்படி ஆண்டு, அருளாகிய அமிருதத்தைத் தருகின்ற காலம் உண்டா?' என்கிறார் அருணகிரியார். பாற்கடலில் பிறந்த அமிருதம் தேவர்களையும் அசுரர்களை யும் வேறு படுத்தியது போல் அல்லாமல் எம்பெருமான் வழங்கும் அருள் அமிர்தம், 'நான் வேறு, நீ வேறு' என்ற வேறுபாட் டுணர்வையே போக்கிவிடும். இரண்டு என்பதே இல்லாமல் அவனுக்குள்ளே நாம் அடங்கிவிடுவோம். எம் பெருமானுக்குள் ஒன்றாகவே கலந்து விடுகின்ற தன்மை உண்டாகிவிடும். 'இறவியொடு பிறவிஅற நீயும் நானுமாய் ஏகபோகமாய் இறுகும்வகை பரமசுக மதனை அருள்' என்று திருப்புகழில் சொல்வது போலவே, இங்கே, உன்னில் ஒன்றா விதித்து ஆண்டு அருள் தரும் காலம்உண்டோ? என்று கேட்கிறார். எம்பெருமான் அருளென்னும் அமிருதத்தை வழங்கவே காத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே, "தரமாட்டாயா?" என்று கேட்கவில்லை. 'எனக்குக் கிடைக்கிற காலம் உண்டா?' என்று கேட்கிறார். வினாவாகக் கேட்டாலும் இங்கே, 'கிடைக்கிற காலம் உண்டு' என்கிற பொருளையே கொடுக்கும். நம் வீட்டிற் குள் வருகிற ஒருவர், “என்ன ஐயா, இன்றைக்கு உங்கள் வீட்டில் சாப்பாடு உண்டா? என்று கேட்டுக் கொண்டே வந்தால், 'இல்லை' என்றா சொல்லி அவரைப் போகச் செய்கிறோம்? அவர்தாம் போவாரா? 'உங்கள் வீட்டுக்கு வந்து விட்டேன்; சாப்பாடு போடுங்கள்' என்கிற பொருளில் தானே, அவர், சாப்பாடு உண்டா?' என்று கேட்கிறார்? அதுபோல, "அருள் தரும் காலம் உண்டோ?' என்று கேள்வியாக இருந்தாலும், 'அருள் தரும் காலம் உண்டு. நீ தரத்தான் வேண்டும். நான் பெறத்தான் வந்திருக்கிறேன்' என்று பொருள்படும். அது 143