பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த வீடும் அந்த வீடும் 2 தோலால் சுவர்வைத்து, நாலாறு காலில் சுமத்திஇரு காலால் எழுப்பி, வளைமுதுகு ஒட்டிக்கை நாற்றிநரம் பால்ஆர்க்கை யிட்டுத் தசைகொண்டு வேய்ந்த குடிசை இது. இந்த அகம் ຫົລrສ குடிசை கட்டினாலும் நான்கு புறங்களிலும் சுவர் வைக்கிறோம். இந்த உடம்பாகிய சிறிய குடிசைக்குச் சுவராக இருப்பது தோல். தோலால் சுவர்வைத்து. தோலாலே சுவர் வைத்து என்று மட்டும் சொல்கிறார் அருண கிரியார். யார் வைத்தார்கள் என்று சொல்லவில்லை, நாமே நம் உடம்பைப் படைத்துக் கொண்டோம் என்று சொல்லலாமா? நாம் பிறந்த பிறகு உடம்பு உண்டாகவில்லை. நமக்குத் தெரியாமலே உடம்போடு பிறக்கிறது உயிர். ஆகவே நாம் உடம்பைப் படைத்துக் கொண்டோம் என்று சொல்ல முடியாது. நம்முடைய தாய் தந்தையர்கள் படைத்தார்கள் என்று சொல்ல லாமா? அப்படியும் சொல்ல இயலாது. அவர்கள் படைத்தது என்றால் ஊனத்தையும், முடத்தையும் படைப்பார்களா? மனைவி யும் சிவப்பு, கணவனும் சிவப்பு. தங்களுடைய குழந்தையும் சிவப்பாகப் பிறக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். கறுப்புக் குழந்தை பிறக்கிறது! அவர்கள் படைத்தால் அப்படிப் பிறக்குமா? ஆகவே உடம்பைப் படைப்பதற்கு நாமும், நம் பெற்றோர்களும் காரணம் அல்ல. படைப்பதற்கு மூலமான சக்தி ஒன்று தனித்திருக்கிறது. அந்தச் சக்திதான் இறைவன். அதை எப்படி அவன் படைத்திருக்கிறான்? தச வாயுக்கள் தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி, நான்கு புறங்களிலும் தோலால் சுவர் வைத்திருக்கிறான். வீட்டுக்கு நான்கு சுவர்கள் இருந்து விட்டால் மாத்திரம் போதா. 223