பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த வீடும் அந்த வீடும் முடியவில்லை. வீட்டுக்குள்ளே போனவரோ, வீட்டின் எண், அவர் இருக்கும் தெரு, எல்லாம் சொல்வதோடு, 'வீட்டுக்குள் நுழைந்தவுடன் முன் கூடத்தில் தந்தத்தால் ஆன இரண்டு யானைகள் இருக்கும். பெரிய வள்ளுவரின் படம் இருக்கும்' என்று அடையாளம் சொல்கிறார். இவர்கள் வெவ்வேறு அடை யாளம் சொன்னாலும் எல்லோரும் சொன்ன பொதுவான அடை யாளம் மயிலாப்பூர். அப்படி முத்தி வீடு என்பதற்குப் பலர் பலவிதமான அடை யாளங்களை அவரவர்களுடைய தகுதி, தன்மை, நிலைக்கு ஏற்பச் சொன்னாலும், பொதுவாகச் சொல்லப்போனால் முத்தி வீடு என்பது இறைவனுடைய தாள்தான். இறைவன் திருவடி அடைந் தார் என்று முத்தி பெற்றவர்களைச் சொல்வது எல்லோருக்கும் வழக்கம். 'புண்ட ரீகத்தினும், செக்கச் சிவந்த கழல்வீடு' என்று அருணகிரிநாதரே சொல்கிறார். சர்க்கரை வேறு, இனிப்பு வேறு என்று வேறு பிரித்துக் காட்ட முடியாததைப் போல ஆண்டவனுடைய தாள் வேறு, அதை அடைந்தவுடன் கிடைக்கின்ற இன்பம் வேறு என்று வேறுபடுத்திச் சொல்ல முடியாது. -. வேண்டுகோள் பலவிதம் உலகத்தார் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் வேண்டு கோள் பல வகை. 'ஆண்டவனே! இந்தப் பிறவியில் என்னை ஊனமாகப் படைத்தாயே; அடுத்த பிறிவியிலாவது நல்ல உடம்பாகக் கொடுக்க வேண்டும்' என்று வேண்டுவர் சிலர். 'அடுத்த பிறவியில் பணக்காரர் மாளிகையில் பிறக்கும்படி செய்ய வேண்டும்' என்பவர் சிலர். 'தேவலோகத்தில் சுவர்க்க இன்பத்தைப் பெற வேண்டும்' என்று விரும்புவார். சிலர். 'இந்திர பதவி வேண்டும்' என்று வேண்டினவர்களும் ၈.ဲါ. ஆனால் அருணகிரியார் சொல்வதைக் கேளுங்கள்; "தோலி னால் சுவர் வைத்து, தசவாயுக்களை ஆதாரமாக வைத்து, இரண்டு கால் வைத்து, வளைகின்ற முதுகாகிய விட்டம் அமைத்து, கை களாகிய சட்டத்தைத் தொங்க விட்டு, நரம்பாகிய ஆர்க்கை 5.Qh5s.III–16 231