பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை வண்டும் மலரும் என்பது நான்காவது சொற்பொழிவு. முதலில் மனத்தை வண்ட்ாகச் சொல்லும் மரபையும் இறை வனுடைய திருவடியாகிய தாமரையில் அவ்வண்டு சென்று ஊதவேண்டும் என்பதையும் எடுத்துரைத்து, மணிவாசகர் திருப்பாட்டு ஒன்றை மேற்கோள் காட்டி விளக்கினேன். பின்பு இறைவன் திருவடியில் நாட்டம் உள்ளவர்கள் அடியார் என்றும், திருக்குறளில் வள்ளுவர் யாவர்க்கும் பொதுவான முறையில் கடவுளின் அடியையே சொல்லியிருக்கிறார் என்றும், அவருக்கு உருவ வழிபாடு உடம்பாடே என்றும் சொல்லியுள்ளேன். இறைவன் திருவடியிலே உள்ளத்தைச் செலுத்துவதால் பெரும் பயன் உண்டென்பதற்கு எடுத்துக்காட்டாகச் சகாதேவன் வரலாற்றைக் கூறினேன். பின்பு அருணகிரியார் நமக்காகத் தாம் குறைபாடுடையவரைப் போலச் சொல்லிக் கொள்வதையும் முருகனை வேண்டிக் கொள்வதையும் விளக்கினேன். அடுத்தது தொண்டர் பெருமை என்னும் சொற்பொழிவு. உலகில் செல்வத்துக்கு உள்ள மதிப்பையும், அச்செல்வம் அமைதி தர மாட்டாமையையும், விரைவில் அழிவதையும் எடுத்துரைத்து, இறைவன் அருட்செல்வம் ஒன்றே அமைதி தரும் என்பதையும் அதனைப் பெற்ற தொண்டர்கள் மிகப் பெரியவர்கள் என்பதையும் விளக்கினேன். தொண்டர் பெருமையை ஒளவையார் திருப் பாடலைக் கொண்டும் பெரிய புராணத்தைக் கொண்டும் ஒருவாறு காட்டியிருக்கிறேன். தொண்டர் குழாத்தைச் சார்வதனால் குருவின் அருளும் இறைவன் திருவருளும் கிடைக்கும் என்ற கருத்தைப் பின்பு சொன்னேன். பதவி, பணம் என்னும் இரண்டி னிடமும் ஆசை கொண்டவர்களுக்கு இன்பம் இல்லை. அவ்விரண்டின் வடிவாக விளங்கிய சூரனும் கிரெளஞ்சாசுரனும் ஞானவேலால் அழிந்தனர். முருகனுடைய தொண்டர்கள் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்படமாட்டார்கள். அவர்களைச் சார்வதனால் நமக்குத் தகுதி ஏறும். இக்கருத்துக்களையும் விளக்கிச் சொற்பொழிவை முடித்திருக்கிறேன். 239