பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு நல்ல வீடாகத் தா" என்று சொல்கின்ற நிலையைப் பெற்றால், 'உனக்குத்தான் நல்ல வீடு கட்டி வைத்திருக்கிறேன். அதைப் பற்றி நீ சிந்திக்காமல் பூதம் தங்கிய வீட்டில் மகிழ்ச்சி அடைந்து இருந்தாயே! வா அப்பா. சுகமாக இரு' என்று அருள் கூர்ந்து அவன் வரவேற்கிறான். நம்முடைய நாட்டு நாடோடிப் பாடலில்கூட இந்த உடம்பை வெறுத்து நித்திய ஆனந்தத்தைத் தருகின்ற வீட்டைத் தேட வேண்டுமென்பதை அறிவுறுத்தும் பாடல்கள் உண்டு. 'எட்டடிக் குச்சுக்குள்ளே - முருகா எத்தனை நாள் இருப்பேன் - ஒரு மச்சுவீடு கட்டித்தாரும் - திருத்தணி மலையில் வேலவனே!” என்பது ஒரு பரதேசி பாட்டு. எண்சாண் உடம்பு என்பதை எட்டடிச் குச்சு என்றும், இறைவன் திருவருள் இன்பத்தை அடையும் முத்தியை மச்சு வீடு என்றும் பரதேசி சொல்கிறான். அருணகிரிநாதப் பெருமான் நாம் இப்போது இருக்கிற குடிசையைப் பற்றி நன்றாக உணர்ந்தவர். என்றும் மங்காத இன்பம் தருகின்ற மெய்யான வீட்டைப் பற்றியும் உணர்ந்தவர். ஐந்து பகைவர் நாம் பெற்ற உடம்பாகிய இந்த வீட்டில் நாம் மாத்திரம் குடி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதில் ஐந்து இந்திரியங்கள் ஆகிய பேய்களும் வாழ்கின்றன. அவற் றுடனே வாழ்கின்ற நமக்கு ஒரு கணமாவது அமைதி இருப்ப தில்லை. நம்முடைய ஆத்மாவுக்குப் பயன் தருகின்ற செயலைச் செய்யப் புகுந்தால் இந்திரியங்கள் அந்தச் செயல்களை மாற்று கின்றன; தங்களுக்கு ஆக்கிக் கொள்கின்றன. இதனை அருண கிரிநாதர் முன் ஒரு பாட்டில் சொன்னார். 'ஓர ஒட்டார் ஒன்றை உன்ன ஒட்டார் மலர் இட்டு உனதாள் சேர ஒட்டார் ஐவர்; செய்வதென் யான்' என்ற பாட்டில் நாம் செய்கின்ற செயல்களுக்குக் குறுக்கே நின்று ஐந்து பேர்கள் தடுக்கிறார்களே என்று புலம்பி இருக்கிறார். வேறு 245