பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 நமக்குத் தெரிகிறது. அதனால் பணத்தைச் சேமித்து வைக்கிறோம். பணம் சோற்றை உண்ணுகிறார்கள். முதல் நாள் ஆக்கிய சோற்றை நீரில் போட்டு வைத்திருந்து மறுநாளும் உண்பவர்கள் வறியவர்கள். அவர்களும் அந்தச் சோற்றை இரண்டு மூன்று நாளைக்கு வைத்துக் கொள்ள முடியுமேயொழிய நெடுநாள் வைத்திருக்க முடியாது. அப்படி வைத்திருந்தால் சோறு வீணாகி விடும். ஆகவே, அவர்கள் பலநாளைக்குப் பயன்படும் அரிசியை வாங்கவேண்டியிருக்கிறது. பிச்சைக்காரனோ ஒவ்வொரு நாளைக் கும் பிச்சைச் சோறு வாங்கி உண்கிறான். அவனைவிட ஒரு வேளை சோறாக்கி அதனை மூன்று வேளைக்குச் சாப்பிடுகிறவன் பணக்காரன். ஒவ்வொரு வேளையும் சூடாகச் சோறாக்கி உண்ணு கிறவன் அவனையும்விடப் பணக்காரன். அந்த அந்த வேளைக்குச் சில்லறையாக அரிசி வாங்குபவனை விட ஒரு மாசத்திற்கு மொத்தமாக மூட்டை அரிசி வாங்கிச் சாப்பிடுகிறவன் இன்னும் பணக்காரன். அதுபோலவே ஆண்டுக்கு வேண்டிய அரிசிக்கு நெல்லாகக் குதிரில் கொட்டி வைக்கிறவன் பெரிய பணக்காரன். நெல்கூடச் சில ஆண்டுகளுக்கே இருக்கும். பல காலத்திற்கும் நெல் விளைந்து பயன்படும் என்று நிலமாக வாங்கிப் போட் டிருப்பவன் எல்லோரையும்விடப் பணக்காரன். அன்றன்று உண்ண வேண்டிய சோற்றுக்கு நெல் அவசியம் ஆதலினால் அந்த நெல்லை விளைக்கின்ற நிலத்தையே பழைய காலத்தில் மக்கள் வாங்கிச் சேர்த்தார்கள். இந்த நாட்டில் பெரிய பணக்காரன் என்று பரந்த நிலத்தை உடையவனுக்குத்தான் பெயராக இருந்தது. நிலங்களைச் சேர்க்க வேண்டுமென்று நினைப்பது மண்ணாசை அரசர்கள் தம்முடைய நாட்டைப் பெருக்க வேண்டு மென்று நினைப்பதும் மண்ணாசைதான். இந்தக் காலத்தில் அரசர் களுக்கு மாத்திரம் மண்ணாசை இருக்கிறது. மற்றவர்களுக்கு மண்ணில் அத்தனை ஆசை இல்லை. பணமாகச் சேர்த்துப் பாங்கி யில் போடவேண்டுமென்ற நிலை இப்போது வந்திருக்கிறது. ஒரு வேளை சோறு உண்டவனுடைய முயற்சி நீளுமானால் மறுவேளைக்குச் சோறு கிடைக்கிறது. அந்த முயற்சி பின்னும் நீளுமாயின் மாதம் முழுவதும் தட்டு இல்லாமல் சோறு உண்ணும் வசதி கிடைக்கிறது. மனிதனுடைய முயற்சிக்கு ஏற்ற செல்வம் 334