பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான கலையும் மையல் வலையும் இல்லாமல் பிறவி வராது. இந்தப் பிறவி வந்த பிறகு முன்னை வினைகள் அநுபவமாக இப்பிறவியில் முளைக்காமல் இரா. அவை கப்பும் கிளையுமாகப் படர்ந்து தழைக்காமல் இருக்கச் செய்யலாமேயொழிய முளைக்காமல் இருக்கச் செய்ய முடியாது. மதி இருக்குமானால், முளைக்கின்ற முன்னை வினைகளின் வேகத்தைக் குறைத்துவிடலாம். எவ்வளவுதான் மதி உடையவன் ஆனாலும் வீசுகின்ற ஊதல் காற்றையும், பனியையும் அழிக்க முடியாது. ஆனால் கம்பளி உடை அணிந்து கொண்டு அவற்றின் கடுமையைக் குறைத்துக் கொள்ளலாம். இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார். உப்பக்கம் என்பது பின் பக்கம். முன் பிறவியில் செய்த கன்மங்களுக்கு ஏற்ப அமைந்த விதியை அநுபவித்து, அதனால் பெருந்துன்பம் அடையாமல் அதனை முதுகு காட்டச் செய்து வெல்பவர்கள் மனத்திண்மை உடையவர் கள். அவர்களுக்கும் ஊழின் வழியேதான் வாழ்க்கை இருக்கும்; இன்ப துன்ப விளைவுகள் உண்டாகும். ஆனால் அவர்களுக்கு அவை அதிகமாக உறைப்பதில்லை. கம்பளிச் சட்டை போட்டுக் கொள்கிற மாதிரி அவர்கள் இறைவன் திருவருளைப் பக்க பல மாகப் பிடித்திருக்கிறார்கள். அந்தத் திருவருட் பலம் மதியினால் கிடைக்கும். மதி படைத்தவன் தனக்கு வரும் துன்பங்களை மிகச் சுருங்கிய அளவில் காண்கிறான். புலி கொல்வதைவிடக் கிலி கொல்வது மிகுதி என்று சொல் வார்கள். புலி கொல்வதற்கும் அஞ்சாமல் இருப்பவர்கள் வீரர்கள். "புலி கொன்றுவிடுமே கொன்றுவிடுமே" என்று கிலியினால் செத்துக் கொண்டிருப்பவர்கள் கோழைகள். சிறிய கல்லும் கோழைக்குப் பெரிய மலை போல இருக்கும். பெரிய மலைகளும் வீரர்களுக்குச் சிறிய கற்களாகத் தோற்றும். மதியின் ஆற்றல் நல்ல பருமனாக இருக்கும் ஒருவனிடம் நூறு பவுண்டு கல்லைத் தூக்கிப் போ என்று சொன்னால், "ஐயோ! இதை எப்படி நகர்த்துவது” எனப் பயப்படுவான். மதி உடையவனாக இருந்தால், அக்கல்லைப் புரட்டக்கூட வலிமை இல்லா விட்டா 31