பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 லும், நான்கு பேர்களை அழைத்து வந்து கல்லைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவான். தானே தூக்குபவனும், பிறரை விட்டுத் தூக்கச் செய்பவனும் ஒரே ஒரு காரியத்தைச் செய்கிறார்கள்; ஏவல் செய்கிறார்கள். ஒருவன் உடலை ஏவுகிறான்; மற்றவன் மதியை ஏவுகிறான். ஒரு பெரிய பாலத்தை ஓர் என்ஜினியர் கட்டினார் என்று சொல்கிறோம். விஷயம் தெரியாதவன், "அவரா கட்டினார்? கொத்தர்கள் அல்லவா கட்டினார்கள்?' என்று நினைப்பான். என்ஜினியர் கட்டினார் என்பதும் உண்மை; கொத்தர்கள் கட்டி னார்கள் என்பதும் உண்மை. என்ஜினியர் மதி நுட்பத்தால் ஏவியபடி கொத்தர்கள் நம் உழைப்பால் கட்டினார்கள். இப்படிப் பல கொத்தர்கள் கட்டினாலும் ஒருவன் கட்டினதாகச் சொல் கிறோம். ஒருவன் ஆணைக்குப் பலர் அடங்கி வேலை செய் தார்கள்; அதனால் அப்படிச் சொல்கிறோம். அதைப் போலவே உடம்பில் பல உறுப்புக்கள் இருக்கின்றன. நடப்பது கால்; வேலை செய்வது கை, சரி தப்புப் பார்ப்பது கண். இப்படிப் பல உறுப்புக்களும் ஒரு வேலையைச் செய்யும்போது செயல்படுகின்றன. ஆனால் உடம்பிலுள்ள எல்லா உறுப்புக்களை யும் இயக்குகின்ற கருவியாக மதி உள்ளது. பல கொத்தர்களிடம் வேலை வாங்குபவராக என்ஜினியர் இருப்பது போல உடம்பி லுள்ள பல உறுப்புக்களிடமும் வேலை வாங்குபவனாக மதி இருக்கிறது. பல கொத்தர்கள் ஒரு பாலத்தைக் கட்டினாலும், பல கொத்தர்களையும் இயக்கிய என்ஜினியர் பாலம் கட்டினார் என்று சொல்வது போல, ஒரு காரியத்தைச் செய்வது உடம்பிலுள்ள பல உறுப்புக்கள் என்றாலும், அந்த உறுப்புக்களை இயக்கிய மதியே அக்காரியத்தைச் செய்வதாகச் சொல்வர். உடம்பின் பலத்தைச் செயற்படுத்துவது அறிவு. நுட்பமாக இருக்கும் ஒன்று செயல் படும்போது பெரிய காரியத்தைச் செய்துவிடுகிறது. "இதை எப்படி அப்பா செய்தான்' என்று பலரும் மதிக்கக் கூடிய காரியத்தைச் செய்துவிடுவது அறிவு, ஞானம். ஞானம் இல்லாத வர்கள் ஒரு சிறு காரியத்தைச் செய்வதற்குக்கூட நடுங்குகிறார்கள். ஞானமும் அருளும் ஞானம் எப்படி வருகின்றது? இறைவன் திருவருளால் வருகின்றது. இறைவன் திருவருளால் ஞானம் பெறாதவர்களுக்கு 32