பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தித் துறை சேர்வதற்கு உரிய காரியங்களைச் செய்யத் தூண்டுகின்ற அறிவு எதுவோ, அதுவே பிறவியைத் தொலைத்து, இன்ப துன்பம் அற்ற ஆனந்த நிலையை எய்துவதற்குத் துணையாகவும் இருக்கிறது. சரியான தண்டவாளத்தின் மேல் தடம் புரளாது செல்கின்ற ரெயில்தான் பல்லாயிரக்கணக்கான மக்களை ஓரிடத்திலிருந்து பல மைல்கள் தாண்டிச் சென்று இறங்கப் பண்ணுகிறது. ரெயில் என்னவோ ஒன்றுதான். அலை மோதுகின்ற புத்தி எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அது செல்கின்ற துறை வேறுபடுவதனால் பிறவி உண்டாகிறது. நீருக்கு நிறம் இல்லை; சுவை இல்லை என்று சொல்வார்கள். ஆனால் கரிசல் மண்ணில் ஊறுகின்ற நீர் கருமையாகவும், உவர்ப்பு மண்ணில் ஊறுகின்ற நீர் உப்புச் சுவையுடையதாகவும் ஆகின்றன. புத்தியாகிய ஆறு பிறவிக் கடலைச் சேர்வதற்கான துறைகளின் வழியே செல்வதனால்தான் காமம், மோகம், மதம், மாற்சரியம் முதலியவற்றினால் கலங்கி நாற்ற மெடுக்கிறது. பிறவித் துன்பத்தை மாற்ற வேண்டுமானால் புத்தித்தரங்கம் பக்தித் துறை வழியே செல்லும்படி செய்ய வேண்டும். நம்முடைய அறிவினால் துன்பம் வருவதால் நமக்கு அறிவே வேண்டாம் என்று சொல்ல முடியுமா? ரெயிலில் சென்றதனால் தான் அரியலூர் விபத்துக்கு உள்ளாகும்படி நேரிட்டது; இனி ரெயிலிலேயே ஏறக்கூடாது' என்று யாராவது சொல்வார்களா? அறிவு தவறான வழியில் செல்லும்போதுதான் துன்பம் ஏற்படு கிறது. நேரான வழியில் சென்றால் நன்மை உண்டாகும். கற்றல் முதலிய நான்கு கற்றலைவிடக் கேட்டல் சிறந்தது என்று சொல்வார்கள். பேசுகின்றது ஒரு பங்கு என்றால் கேட்பது இரண்டு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன் பேசுவதற்கு ஒரு வாயைக் கொடுத்துவிட்டுக் கேட்பதற்கு இரண்டு செவிகளை வைத்திருக்கிறான் போலும் கேட்டதைச் சிந்தித்துப் பயன் அடைகிறவர்களுக்குக் கேள்வி சிறந்தது. மாடு நன்றாக மேய்ந்துவிட்டுத் தனிமையான ஒர் இடத்தில் போய்ப் படுத்து அசை போடுவது போல, நல்ல பொருள்களைக் கேட்டுவிட்டுப் பின்பு எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்துச் சிந்தித்துப் 81.