பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 என்று திருக்கோவையாரில் வருகிறது. பக்தர்கள் படுக்கையை விட்டு எழும்போதே, இறைவனைத் தொழுகிறார்கள். வள்ளுவர் மனைமாட்சி என்ற அதிகாரத்தில், "கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்கிறார். 'தொழுது கொண்டே எழுந்திருப்பதாவது? எழுந் திருந்த பின்தானே தொழ வேண்டும்?' என்று தோன்றலாம். தூங்கும்போது நம்மை மறந்து தூங்குகிறோம். விழிப்பு ஏற்படும்போதே உணர்ச்சி ஏற்படுகிறது. அந்த உணர்ச்சி தோன் றியவுடனே தொழுது கொண்டே எழுந்திருக்கிறார்கள் அன்பர்கள். எழுந்திருப்பதற்கு முன் தோன்றுகிற முதல் உணர்ச்சியிலேயே இறைவனின் நினைவு அவர்களுக்குத் தெளிவாக உண்டாகி விடு கிறது; இறைவனைத் தொழுது கொண்டே எழுந்திருக்கிறார்கள். தொழுதெழுவாள்' என்பதற்கு உரையெழுதிய பரிமேலழகரும், தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாக லின் தொழுதெழுவாள் என்றார் என்கிறார். நினைப்பது எளிது மனம் எப்பொழுதெல்லாம் வேலை செய்கிறதோ அப்பொழு தெல்லாம் இறைவனை நினைக்க வேண்டும். 'இன்னும் நான் பல் தேய்க்கவில்லையே! நீராடித் திருநீறு அணியவில்லையே! இப்போது எப்படிக் கடவுளை நினைப்பது?' என்று சிலர் சொல்லலாம். பல் தேய்த்துநீராடா விட்டாலும் மூச்சுவிடுவது இல்லையா? மூச்சுவிடுவதைப் போலவே இறைவனை மனத் தால் நினைக்க வேண்டும். திருக்கோயில் செல்லவேண்டுமானால் சுறுசுறுப்பு இருக்க வேண்டும். இறைவனுக்கு அருச்சனை செய்ய வேண்டுமானால் மலர் முதலாயின. இருக்க வேண்டும். அவனைப் பாட வேண்டு மானால் இசை வேண்டும்; தொண்டையும் நன்றாக இருக்க வேண்டும். இவற்றுக்கு எல்லாம் வேறு கருவிகளின் துணை அவசியமாக இருக்கிறது. ஆனால் இறைவனை நினைப்பது மிக எளிது. மனம் நினைக்க வேண்டும். நாம் உணர்ச்சியுடன் இருக்கும்போதெல்லாம் மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மனத்திற்கு இறைவனது திருக்கோலத்தை நினைப்பதைக் காட்டிலும் அவன் திருக்கரத்திலுள்ள வேலை 88