பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈயாதவர் படும் பாடு வகைத் திருட்டு. இதை அடிக்கடி மகாத்மா காந்தி அடிகள் சொல்வார்கள். இறைவனை நினைந்து கசிந்து பிறருக்கு ஈயும் இயல்பு இல்லாதவர்கள் மேலும் மேலும் பணத்தை ஈட்டுகிறார்கள். அந்தக் கசிவு இருப்பதற்கு இறைவனுடைய திருவருள் நினைவு வேண்டும். முன்னை வினைப்பயன் அதற்கு இடம் கொடுப்பது இல்லை. அவர்கள் முன் செய்த பாதகத்தினால் இப்போது பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் குவிக்கிறார்கள். தேடி யதை யாரிடத்தும் நம்பிக்கை இல்லாமையால் புதைக் கிறார்கள். அந்தப் புதையலைத் தம்முடைய காலத்திலேயே பிறர் மறைவாக எடுத்துக் கொண்டு செல்ல அதனால் ஏமாந்து போகிறவர்கள் உண்டு. அவர்கள் தம்முடைய வாழ்நாளில் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இறந்து போகப் பிறகு யாரோ ஒருவர் அதை எடுத்துக் கொள்வதும் உண்டு. திருட்டில் கொடுத்தல் தாம் ஈட்டியதை இப்படிப் புதைத்து வைத்துவிட்டு மீண்டும் ஒருநாள் புதையலைப் பிரித்துப் பார்க்கும்போது அது கிடைக்காமல் திண்டாடியவர்கள் பலர். திருட்டில் கொடுத்த பிறகு அவர்களுக்கு உண்டாகிற திகைப்புக்கு அளவேயில்லை. மனத்தில் கவலை மிகுதியாகிறது. அதனால் அவர்கள் உடம்பு இளைத்துப் போகிறது. "ஐயோ! போய் விட்டதே' என்று வாடிச் சாகிறார்கள். அவர்கள் அறிவு உடையவர்களாக இருந்தால் ஒரு முறை திருட்டில் கொடுத்த பிறகு இனி இப்படிச் செய்யக்கூடாது என்று நினைக்கவேண்டும். 'போனது போகட்டும் இனியாவது நாம் ஈட்டிய பொருளைப் பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்று அறிவு வேண்டும். பொருளிடத்தில் உள்ள பற்று அப்படிச் செய்ய இடம் கொடுப்பது இல்லை. ஒருமுறை திருட்டில் கொடுத்து விட்டால் அதனையே நினைந்து ஏங்கி வாழ்நாள் முழுவதும் துயரத்தில் இளைத்துச் சாம்புகிறார்கள். பணத்தை ஈட்டியது சில காலம். அதனை இழந்தால் உண்டாகிற துன்பமோ எஞ்சியிருக்கிற வாழ்நாள் முழுவதும் நின்று வாட்டுகிறது. என்னுடைய 97.