பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகைக் கவிகள் இறைவனுடைய தத்துவத்தைப் பற்றி எப்படிச் சொன்னாலும், மோட்சத்தைப் பற்றிய இலக்கணத்தை எப்படிச் சொன்னாலும், மனத்தை அடக்கி ஒருமைப்பாடு அடைவது அவசியம் என்பதில் வேறுபடவில்லை. இதைப்பற்றி வற்புறுத்திச் சொல்லாத ஞானிகள் உலகத்தில் எங்குமே இல்லை. மனம் ஒருமைப்பட்டுச் செத்துப் போவதுதான் சமாதிநிலை. குறிப்பிட்ட சமயத்தில், குறிப்பிட்ட வேளையில் மனம் அடங்கிக் கட்டுப்பட்ட நிலையில் இருப்பது மனோலயம். இப்படி மனம் அடங்கி நிற்கவேண்டுமானால் அடுத்தடுத்துத் தியானம் பண்ண வேண்டும். தியானம் பண்ணிப் பண்ணி மனம் ஒன்றை நினைத்து நிலைபெற்று நிற்கும்போது மனோலயம் உண்டாகிறது. அந்த மனோலயம் நீடிக்கும்போதுதான் கருவி கரணங்கள் கழன்று சமாதி நிலை உண்டாகும். சிலருக்கு அந்நிலை கோழித் தூக்கம் போல் இருக்கலாம். அது சவிகற்ப சமாதி. சிலருக்குக் காடாந்த காரத் தூக்கமாக இருக்கும். அது நிர்விகற்ப சமாதி. சகஜ சமாதி என்பது தூக்கமே இல்லாத நிலை. விழித்துக் கொண்டுள்ள போதே தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டாமல் இருப்பது அது. நம்மைப் போலவே அவர்களும் நடந்துகொண்டும், உட் கார்ந்துகொண்டும், இருப்பார்கள். ஆனால் மனம் செயல்படாது; அது நாசமாகிவிடும். நமக்கு அந்த நிலை வரவேண்டுமென்றால் முதலில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிற மனத்தை நிறுத்தப் பழக வேண்டும். - நிற்பதாவது, பலவற்றை எண்ணுகின்ற எண்ணம் மாறி, ஒன்றையே எண்ணி ருைமைப்படுதல். ஒன்றையே எண்ணுகின்ற நிலை வரவேண்டுமானால் இறைவனைப் பற்றி நினைக்க வேண் டும். அவன் திருவடியை நினைந்து தியானம் செய்ய வேண்டும். எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கிற மனம் ஒன்றைப் பற்றியே நினைக்கும்போது நிற்கிறது. நெடு நேரம் நிற்கும்போது தூங்குகிறது. தூங்கிப் பழகினால் கடைசியில் செத்துப் போகிறது. அதை மனோநாசம் என்பார்கள். அது படிப்படியாக வர வேண்டும். மனோலயம் இன்றி மனோநாசம் உண்டாகாது. நம் கையில் அகப்படாமல் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிற மனத்தை அடக்கி நிற்கவைத்துப் பிறகு தூங்கப் பண்ண வழி என்ன? 149