பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அமைந்து விட்டது. உலகம் உய்ய வழிகாட்டும் கெளதம புத்தராக விளங்க அவருடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிவிட்டது; அரண்மனையைத் துறந்து, மனைவியைத் துறந்து மகனைத் துறந்து, இன்ப போகத்தை எல்லாம் துறந்து, இரவுக்கு இரவாகவே அவரைப் போதிமரத்தடிக்கு ஒடும்படியாகச் செய்துவிட்டது. மாலு வைராக்கியம் யாரோ உளுந்து உடைத்துக் கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்தார் ஒரு ஜைனர். "இத்தனை நாளும் தோலும் பருப்புமாக ஒட்டி வாழ்ந்த உளுந்து உடைக்கும்போது தோல் வேறு பருப்பு வேறாகப் போய்விட்டதே! அப்படி உடம்பும் உயிரும் ஒட்டியே இருந்தாலும் யமன் வந்தால் உயிர் வேறாக, உடம்பு வேறாக அல்லவா போகப் போகின்றன?' என்கிற ஞானம் பிறக்கவே துறவியாக மாறிவிட்டார். இதை மாவு வைராக்கியம்' என்பர். இப்படி ஞானப்பசியுடைய உள்ளத்திலும் கவிஞனுடைய உள்ளத்திலும் எந்தச் சிறிய சம்பவமாக இருந்தாலும் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிவிடும். அவர்களுடைய உள்ளம் மெழுகு போல் எதைக் கண்டாலும் உருகும் தன்மை உடையது. அதில் எந்தப் பொருளை வைத்தாலும் அது பதிவை உண்டாக்கி விடு கிறது; ஒட்டிக் கொண்டு விடுகிறது. பொன்னின் உருக்கம் நாமும் நம்முடைய துன்பத்தைக் கண்டும், பிறருடைய பெருமையைக் கண்டும் உருகுகிறோம்; இரங்குகிறோம். இப்படிப் பட்ட உருக்கமும் உருக்கந்தான். அது பயன் இல்லாத உருக்கம். களிமண்ணில் நீரைக் கொட்டி மிதித்தாலும் அது இளகுகிறது; உருகுகிறது. அதில் வைரத்தைப் பதிக்க முடியுமா? இரும்பை உலையில் இட்டால் அதுவும் உருகுகிறது. அதில் வைரக்கல்லைப் பதிப்பார்களா? மண்ணின் உருக்கமோ இரும் பின் உருக்கமோ வைரத்தைப் பதிக்கப் பயன்படாது. பொன்னின் உருக்கந்தான் பயன்படும். எத்தனையோ பேர் எத்தனையோ விதமான விஷயங் களை நினைந்து உருகினாலும் இறைவனை நினைந்து உருகு கின்ற பக்தர்களுடைய உருக்கத்தில்தான் எம்பெருமானாகிய மாணிக்கம் பதிகிறது. அவர்கள் மனம் பொன் போன்றது. இந்த உருக்கந்தான் வேண்டுமென்று சொல்கிறார் அருணகிரியார். 154