பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் வது? இந்தப் பிறப்பில் அவர்கள் எவ்விதமான பாவபுண்ணி யங்களையும் செய்யவில்லையாதலால் அவர்கள் முன் பிறப்பில் செய்தவை தொடர்ந்து வருகின்றன என்று கொள்ள வேண்டும். ஆகவே, ஒருவன் இறக்கும்போது அவன் உயிர் செல்கின்ற தனி வழியே வீடு தொடர்ந்து வருவது இல்லை. அவன் சேர்த்து வைத்திருக்கிற தங்கம், அவனுடைய மனைவி, மைந்தர்கள் யாரும் தொடர்ந்து வருவது இல்லை. புண்ணிய பாவமே தொடரும். உயிர் போம் வழி உயிர் போகின்ற கடைசி வழி எப்படிப்பட்டது? தனி வழி அது. யாரும் உடன் வரமுடியாத தனி வழி. உடம்போடு போகத் துணை உண்டு; உயிரோடு போகத் துணை இல்லை. 'பயந்த தனிவழி' என்று ஒர் இடத்தில் அருணகிரியார் சொல்கிறார். "நும்மை நேடிவரும் தொலையா வழி' என்று முன்பு சொல்லியிருக்கிறார். 'நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தானாகவே உங்களைத் தேடி வருகிற தொலையா வழி அது. அதில் நீங்கள் யாத்திரை செல்லும் போது துணை வேண்டுமென்றால், மலை ஆறு கூறுகளாகப் போகும்படி வேலை விடுத்த வேலாயுதனை வணங்கி, ஏற்றவர்களுக்குக் கீரை இருந்தாலும், வெந்தது எது இருந்தாலும பகிர்ந்து கொடுக்கும் நிலையான மாதவத்தைச் செய்யுங்கள். அந்தத் தர்மந்தான் தொலையா வழிக்குப் பொதி சோறும் உற்ற துணையுமாக உங்க ளுக்கு வந்து உதவும்' என்று முன்பு எல்லோரையும் பார்த்துச் சொன்னார். ஒரு நாள் இரண்டு நாள் போகக்கூடிய வழியாக இருந்தாலே, 'துணையோடல்லது நெடு வழி போகேல்" என்று சொல்வார்கள். உயிர் எத்தனை பிறவிகள் யாத்திரை செய்யப்போகிறதோ தெரியாது. அது போகிற வழியும் தொலையா வழி, நெடு வழி: அதுவும் யாரும் துணைக்கு வர இயலாத தனி வழி. பொன், பொருள், மனைவி, மக்கள் எல்லாம் உயிர் போகின்ற அந்தத் 227