பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 கூடையை எடுத்துக் கொண்டு போய் நெல்லை அரித்து வந்தார். விறகு இல்லை. வீட்டில் மேல் இருந்த கூரையிலுள்ள கம்பு களைப் பிரித்துக் கொடுத்துச் சமைக்கச் சொன்னார். காய்கறி ஒன்றும் இல்லை. புறக்கடையில் இளம் பயிராகக் குழியில் ஏதோ இருந்தது. அதை அப்படியே அவசர அவசரமாக அரிந்து கொண்டு வந்தார். அவர் குழியிலுள்ள பயிரையா அரிந்தார்? தம்முடைய பாசத்தின் அடியவரையே அரிந்தார். இதைச் சேக்கிழார் அழகாகச் சொல்கிறார். "குழிநிரம் பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க' என்கிறார். - சமையல் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து பார்த்தால் அடியாரைக் காணவில்லை. சிவபிரான் காட்சியளித்து, 'நானே உன்னைச் சோதனை செய்தேன்' என்று அருளி இன்ப வாழ் வளித்தான். இறைவன் நினைவும் இடுதலும் இப்படிக் கடைசிப் பொருள் உள்ளவரைக்கும் ஏற்பவர்க்கு இடுகிற உத்தமர்கள் உலகில் இருக்கிறார்கள். பொருள் இருந்தா லும் கொடுக்க மனம் இல்லாத லோபிகளும் இருக்கிறார்கள். அறம் செய்வதற்குப் பொருள் வேண்டும் என்பது அல்ல; மனம் வேண்டும். இதை இளையான்குடி மாறனாரிடத்தில் பார்த்தோம். இறைவன் திருவருளை உணர்ந்தவர்கள், அவன் அருள் எப்படிக் கிடைக்கும் என்று ஏங்கி, தம்மிடமுள்ள பொருள்களைத் தர்மம் செய்வார்கள். இறைவன் அருளை நினைத்தால்தான் அவ்வாறு கொடுக்கத் தோன்றும். இறைவன் அருளை மனத்தில் வைக்காதவர்களுக்கு தங்க மாகவும் வீடாகவும் பொருளைச் சேர்த்துக் கொள்ளத் தெரியும். மடந்தையர்களுக்காகப் பொருளை அழிக்கத் தெரியும். அவர் களுடைய வீடும் மடந்தையருமா உயிர்போம் தனி வழிக்குத் 230