பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 நோவு எடுப்பது இல்லையா? அவர்களும் மனிதர்களாகையால் இளைப்பு உண்டாவது இயற்கை. ஆனால் அந்த இளைப்பை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்குச் சில உபாயங்கள் தெரியும். ஏற்றம் இறைப்பவர்களும், நாற்று நடுபவர்களும், அரிசி குத்துபவர்களும், சுண்ணம் இடிப்பவர்களும் வேலை செய்யும் போது நேரம் போவது தெரியாமல் இருக்க ஒரு காரியம் செய்கிறார்கள். அவர்களுக்குத் தாங்கள் செய்கிற வேலையினால் தமக்குப் பயன் உண்டென்று நன்றாகத் தெரியும். ஆனால் அந்த வேலையினால் உடம்புகளைத்துப் போகாமல் இருக்க வேண்டுமே; அதற்காகப் பாட்டும் பாடுகிறார்கள். உள்ளம் களைத்து உடல் களைத்துப் போகாமல் இருக்க அந்தப் பாடல்களை மகிழ்ச்சி யுடன் பாடிக் கொண்டே வேலை செய்கிறார்கள். பாட்டிலே மனம் சென்றதானால் வேலையினால் உண்டாகின்ற இளைப்புக் குறைந்து விடுகிறது. காலம் போவது தெரியாமல் வேலையில் ஈடுபடுகிறார்கள். கிராமங்களில் இத்தகைய காட்சிகளைக் காணலாம். இரண்டு பேர் ஏற்றம் இறைப்பார்கள். ஒருவன் ஏற்றத்தின் மேல் இருந்து அதை மிதிப்பான். மற்றவன் கிணற்றில் இருந்து தண்ணிர் வாங்கிவிடுவான். கீழே இருப்பவன் பாட மேலே இருப்பவன் அதை வாங்கிப் பாடுவான். பாட்டுத் தடைபடாமல் எத்தனை நேரம் போய்க் கொண்டே இருக்கிறதோ அத்தனை நேரம் ஏற்றம் ஒடும். பாட்டுப் பாடியே அவர்கள் உடம்புக்கு வருகிற அலுப்பைப் போக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் பாட்டில் இனிமை இருக் கிறது; பொருளும் உண்டு. ஆனால் இந்த இரண்டுக்கும் மேலே அவர்களைக் களைப்புறாமல் இருக்கச் செய்கிறது அந்தப் பாட்டின் இசை. "ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை' என்று ஒரு பழமொழி உண்டு. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் தொழிலாளர் பாடு வதாகப் பல பாடல்களைப் பாடி இருக்கிறார். அந்தப் பாடல் களை, வரிப்பாட்டு என்று சொல்வார்கள். இளங்கோவடிகள் பழைய பாடல்களைக் கண்டு அந்த மெட்டில் தாமே பாடி அமைந்த பாடல்கள் அவை. இந்த நாட்டில் அங்கங்கே பல வகைத் தொழிலாளர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் வேறு வேறாக உள்ளன. அந்தப் பாடல்களை நாடோடிப் பாடல்கள் என்று சொல் i4