பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி இனி அசட்டையாக இருப்பேனா? இன்னும் இந்தப் பாவிக்கு அவனைச் சந்திக்கும் பாக்கியம் கிட்டவில்லையே!” மயில் வாகனனைச் சந்திக்கிலேன் சந்திப்பதாவது என்ன? நாமும் அவனை நோக்கிப் போக வேண்டும்; அவனும் நம்மை நோக்கி வரவேண்டும். இரண்டு பேரும் நடுவில் சேர்ந்தால் அதைச் சந்திப்பது என்று சொல்வோம். ஒருவருக்கொருவர் போய்க் கண்டு வராமையினால் உறவு கெட்டது என்று சொல்வது உண்டு. "கடன் கேளாமல் கெட்டது; உறவு காணாமல் கெட்டது' என்கிற பழமொழி உண்டு. உறவு கெடாமல் இருக்கும் பொருட்டு உறவினரைப் பார்க்க அவர் வீட்டுக்கு நாம் போகிறோம்; இது நாம் பேட்டி காண்பது. அவர் நம் வீட்டுக்கு நம்மைப் பார்க்க வருகிறார்; இது அவர் பேட்டி கொடுப்பது. ஆனால் அவர் நம்மைப் பார்க்க வரும்போது, நாமும் அவரைக் காணப்போய் இடையிலே இரண்டு பேரும் ஒன்று சேருவதுதான் சந்தித்தல். "எம்பெருமான் மயில் வாகனத்தின்மீது வரும்போது, நான் அப்பெருமானை எதிர்கொண்டு அழைக்கவில்லையே! என் வீட்டைவிட்டு வெளியே வந்து சந்திக்கவில்லையே!” மயில் வாகனனைச் சந்திக்கிலேன்! என்று இவன் மனம் புழுங்கினான். உற்சவ மூர்த்தி மயில் வாகனன் என்று சொல்லும்போதே உற்சவ மூர்த்தி யின் ஞாபகம் வரும். வீட்டை விட்டு வெளிக் கிளம்பாமல், ஆலயத்திற்கு ஒருநாளும் வந்தறியாதவர்களுடைய வீட்டு வாசலை அவனே தேடி வருகிறான். நான் இருக்குமிடம் தேடி நீ வராவிட்டாலும் நீ வசிக்கிற வீடு தேடி நான் வருகிறேன். எழுந்திரு அப்பா. தூங்காதே. வெளியே வந்து பார் என்று கொட்டு முழக்கோடு, வாணங் களோடு, திவ்யாலங்காரம் உடையவனாய் வருகிறான். உற்சவ மூர்த்தியின் இயல்பை விளக்கும் பாடல் ஒன்று திரு விசைப்பாவில் இருக்கிறது. ஆலயத்திற்குச் சென்று மூல 255