பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் ஒருவன் அடுக்கினால் அவனுக்கு வந்தது லாபம் என்று தெரி கிறது. ஆனால் அருணகிரியார் இங்கே, w பஞ்ச பூதமும் அற்று உரையறறு உணாவு அறறு உடல அறறு உயிர் அற்று:உபாயம் அற்றுக் கரையற்று இருள்அற்று எனதுஅற்று என்று வரிசையாக அற்று அற்று' என்று அடுக்குகிறார். இது லாபமாகுமா? நம்மிடம் இருப்பது நம்மை விட்டுப் போனால் நஷ்டம் அல்லவா? அற்று அற்று' என்று சொல்வதே அமங்கல மல்லவா? - இவ்வாறு தோன்றலாம். ஒருவனுக்குத் தீராத நோய். கண் எரிச்சல், காது வலி, வயிற்று வலி, பல்லில் இரத்தம் என்று எல்லாவிதமான நோய்களும் உண்டு. அவன் வயிற்று வலி தாங்கவில்லை என்று ஒரு டாக்டரிடம் போனால் அவர் வயிற்று வலிக்கு மருந்து கொடுக்கிறார். காது வலி என்றால் அவர், ' இ.என்.டி. நிபுண ரிடம் போங்கள்' என்று வேறு ஒருவரிடம் போகச் சொல்கிறார். அங்கே போய்க் காது வலிக்கு மருந்து போட்டுக் கொள்கிறான். அவரிடம், 'பல்லில் இரத்தம் வருகிறது. தாடை கடுக்கிறது” என்று சொன்னால் அவர் பல் வைத்தியரிடம் போகச் சொல் கிறார். தினமும் அவன் வயிற்றுவலி டாக்டரிடம் போக வேண் டும்; பல் வைத்தியரிடம் போக வேண்டும்; கண், காது, மூக்கு வைத்தியரிடம் போக வேண்டும். அவன் என்ன செய்வான் ஒரு நாள், 'ஏன் அப்பா இப்படிக் கஷ்டப்படுகிறாய்? டாக்டர் சண்முகத் தினிடம் போ. எல்லாவற்றுக்கும் அவரே தக்க வைத்தியம் பண்ணுவார்' என்று சொல்லிப் போனார், ஒரு பெரியவர். டாக்டர் சண்முகத்திடம் அவன் சென்று சிகிச்சை பெற்றான். ஒரு மாதம் கழித்து அந்தப் பெரியவர் வந்தார். 'சுவாமி அந்த டாக்டர் எனக்கு எத்தகைய வைத்தியம் செய்தார் தெரியுமா? என்னுடைய கண் எரிச்சல் போயிற்று; காது வலி போயிற்று; பல்லில் இரத்தம் வடிவது போயிற்று; வயிற்றுவலி போயிற்று' என்று அவன் போயிற்று, போயிற்று என்று சொன்னால் அது அமங்கலமாகுமா? நஷ்டமாகுமா? இல்லை. அவனுக்குத் துன்பம் அளித்து வந்த நோய்கள் எல்லாம் போனது அவனுக்கு இன்பம்; லாபம். 273