பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 யையே சத்திய சோதனை என்று பெயரிட்டு எழுதியிருக்கிறார். ஆத்ம சோதனை செய்வது எதற்காக தங்களுடைய அன்பை, தங்கள் நெஞ்சத்தைப் பிறருக்கு நிரூபிப்பதற்காக அல்ல. 'நாம் இந்த மனத்தை நம்பி, கருவி கரணங்களை நம்பி ஒரு காரியத்தைச் செய்யத் துணியலாமா?' என்று அறியவே, தங்களுடைய புத்தி திடமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவே அடிக்கடி சோதித்துக் கொள்வார்கள். அடிக்கச் சொன்ன பெரியவர் ஒரு பெரியவருக்கு எம்பெருமானிடத்தில் அன்பு வந்தது. அந்த அன்பு ஊற்றமாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டுமென்று அவருக்கு ஆசை. தம்முடைய மாணவனிடத் தில், "அப்பா நான் தூங்கும்போது திடீரென்று ஒரு குச்சியை எடுத்து என்னை அடி" என்றார். "ஐயோ! நான் மாட்டேன். அது மிகவும் பாவம் ஆயிற்றே சுவாமி!' என்று அந்தப் பிள்ளை சொல்லிவிட்டான். 'இல்லை அப்பா. ஆண்டவன் திருவருள் அப்போதுதான் எனக்குக் கிடைக்கும். என்னுடைய கனவில் அப்படித்தான் எம்பெருமான் சொன்னார். அயர்ந்து தூங்கும் போது உன்னை யாராவது குச்சியால் அடித்தால் அப்போது நான் உனக்கு அருள் செய்ய வருவேன்' என்று சொல்லியிருக்கிறார். நீ கட்டாயம் அடிக்கத்தான் வேண்டும்' என்று வற்புறுத்தினார். அந்தப் பையனும் சம்மதித்துவிட்டான். அவர் ஒரு நாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவன் ஒரு குச்சியால் ஓங்கி அடித்தான். அவர் உடனே, "ஐயோ!' என்று கத்திக் கொண்டு எழுந்திருந்தார். உடனே அந்தப் பிள்ளையைப் பார்த்து, 'இன்னும் என்னை அடியப்பா; இன்னும் என்னை அடி' என்று கத்தினார். பையனுக்கு ஒன்றும் விளங்கவில்லை; விழித்தான். 'அப்பா நான் எந்தக் காலமும் இறைவனை நினைந்திருந்தேன். உறங்கப் போகும்போது இறைவனை நினைப்பேன். உறங்கி விழிக்கும் போது இறைவனை நினைப்பேன். திடீரென்று எழுந்திருந்தால் இறைவனை நினைத்துக் கொண்டு அவன் நாமத்தைச் சொல்லிக் கொண்டே எழுந்திருக்கும் பக்குவம் எனக்கு வந்துவிட்டதா 31 O.