பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 சென்று போற்றுவது முதல் பாடம். அந்தப் பழக்கம் முறுக முறுகப் புத்தியில் விளைவது ஒன்று இருக்கிறது. ஆண்டவனுடைய கோயிலுக்குச் சென்று, கையைக் குவித்துப் போற்றுவது உடம்பினால் செய்ய வேண்டிய செயல். அடுத்தப் படி புத்தி வேலை செய்கிறது. “புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்தில் புகட்டி அன்பாய்" என்று ஒரு பாட்டில் சொன்னார். உடம்பினாலே சென்று போற்றத் தெரிந்த அன்பு புத்தியில் சார்கிறது. அழுது தொழுது உருகிச் சாதித்த புத்தி வந்து எங்கே எனக்கு இங்ங்ன் சந்தித்ததே! நமக்குக் கிடைக்கவேண்டிய பொருள் கிடைக்காமல் இருந் தால் அழுகிறோம். இருக்கிற பொருள் நம்மை விட்டுப் போய் விட்டால் அழுகிறோம். நமக்குக் கிடைக்கவேண்டியது ஆண்ட வனின் அருள். ஆண்டவன் நமக்கே உரியவன். நமக்குக் கிடைக்க வேண்டிய ஒன்றை நாம் இழந்து நிற்கிறோம் என்று நினைத்தால் அழுகை வரும். ஆத்மா இறைவனோடு ஒன்றாவிட்டால் எத்தனைதான் வேறு இன்பங்கள் இருந்தாலும் எவ்விதப் பயனும் இல்லை. ஆண்டவனோடு நான் இன்னும் ஒன்றாமல் இருக்கிறேனே! அவனிடத்தில் சென்று சேரவேண்டியவன் அல்லவா நான்? எனக்கே உரியவனாகிய அவன் இன்னும் என்னிடத்தில் வரவில்லையே’ என்று நினைத்தால் உருக்கம் உண்டாகும்; ஆண்டவனுக்கு முன்னாலே நின்று, “முருகன் குமரன் குகன் என்று மொழிந்து' உருகி அழுது தொழுது கொண்டிருப்போம். அன்பினாலே முதலில் இந்தப் புத்தி அழச் சாதித்துக் கொண்டது. மெய்யன்பினாலே அழுது தொழச் சாதித்துக் கொண்டது. சோதித்த மெய்யன்யினாலே அழுது தொழுது உருகச் சாதித்துக் கொண்டது. சாதித்த புத்தி - "அப்படிச் சாதித்துக் கொண்ட புத்தி எனக்கு எப்படி வந்து சேர்ந்தது? இந்தச் சாதித்த புத்தி வருவதற்கு நான் தொண்டர் 322