பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பாம்பும் படமும் திருப்புகழ் பாடுவதற்குக் காரணம் மனம் ஒருமுகப்பட வேண்டுமென்பதுதான். மனத்தின் சலனம் ஒழிந்தால் அது ஒரு முகப்படும். நாம் படிக்கிற பாட்டு மனத்தில் பதிய வேண்டுமானால் மற்றொன்றை நினைக்காமல் அதில் ஒன்று பட வேண்டும். எப் பொழுதும் சுழன்று கொண்டே இருக்கும் மனத்தை ஓரிடத்தில் நிலையாக நிறுத்த வேண்டுமானால் அதை வேறு ஒன்று அமுக்கிக் கொண்டிருக்க வேண்டும். பறக்கிற காகிதத்தின் மேலே கனமான பொருளை வைக்கிறோம் அல்லவா? அப்படி, எப்போதும் பறந்து கொண்டிருக்கிற மனத்திலே இறைவன் திருவடி படிந்தால் அது ஒருமுகப்படும். - இப்படியெல்லாம் நினைந்து அருணகிரியார் கண்ணபிரா னுடைய திருவிளையாடலை நினைக்கிறார். அவன் காளிங்க நர்த்தனம் செய்தான். ஐந்து தலை நாகத்தின் மீது ஒரு காலால் நின்று கொண்டு நடனம் செய்தான். அப்போது பாம்பின் வாலை யும் ஒரு கையில் பிடித்துக் கொண்டிருந்தான். அந்தப் பாம்பு தலையாடாமல், வால் ஆடாமல் திணறிற்று. தலையாட்டத்தை விட வாலாட்டம் மிகப் பெரிது. அதனால் அதையும் கையால் பிடித்துக் கொண்டான். தலையை ஆட்டாமல் இருக்கக் காலால் அமிழ்த்திக் கொண்டிருந்தான். சாரைப் பாம்புக்கு வாலில் விஷம், நாகப் பாம்புக்குத் தலையில் விஷம் என்பார்கள். தலையிலும் வாலிலும் விஷம் உடைய பெரும் பாம்பு காளிங்கன். அதனுடைய நஞ்சு அந்தப் பொய் கையையே நச்சுப் பொய்கையாக்கிவிட்டது. அந்தப் பொய்கையில் உள்ள நீர் மாத்திரம் அல்ல, கரையிலுள்ள மரங்கள் எல்லாமே அந்த நஞ்சினாலே பொசுங்கிப் போய்விட்டன. காளிங்கனின் மூச்சுப்பட்ட இடங்கள் நாசமாகிக் கொண்டிருந்தன. அந்தப் பாம் போடு யாராவது விஷப்பரீட்சை செய்வார்களா? முருகனுடைய மாமன் அதன்மேல் நின்று ஆனந்தக் கூத்தாடினான்! நம்முடைய மனம் காளிங்கன். ஐந்து பொறிகளாகிய படங் களின் வாயிலாக அது நஞ்சைக் கொப்புளிக்கிறது. மனம் என்னும் காளிங்கன் நஞ்சு கொப்புளிக்காமல் இருக்க வேண்டு மென்றால் இறைவன் அதன்மேலே நின்று கூத்தாட வேண்டும். வாலையும், தலையையும் ஆட்டிக் கண்ட கண்ட இடங்களில் 32