பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மற்றொரு பொருள் அவள் சொல்லாத ஒரு பொருளும் உண்டு. வரப்பு என்பது வரம்பு என்பதன் விகாரம். பள்ளிக்கூடத்தில் நம் பிள்ளைகள் படிக்கிறார்கள். பழங்காலத்தில் படித்தவர்கள் இப்போதுள்ள படிப்பைப் பார்த்து, "இந்தக் காலத்துப் படிப்பு என்ன ஐயா வரவர மட்டமாகிவிட்டது. ஸ்டாண்டர்டு இல்லை' என்று சொல்கிறார்கள். ஸ்டாண்டர்டு என்பது வரம்பு. மனிதனுடைய லட்சிய வரம்பு உயரவேண்டுமென்பதையும் பாட்டி அந்த ஓர் அடியில் குறிப்பிட்டாள். மனிதனுடைய லட்சியம் உயர உயர அவனது வாழ்க்கை அநுபவங்கள் உயரும். அவனும் உயர்ந்து வருவான். வயல்களில் உள்ள வரப்பு உயர வேண்டும் என்பதோடுகூட மனிதனுடைய வாழ்க்கையின் லட்சிய வரம்பும் உயரவேண்டுமென்று ஒளவை வாழ்த்தியதாகக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அணுவும் அலையும் ஒளவைப் பாட்டி சுருக்கமாகப் பேசுகின்றவள், பாடுகிறவள் என்பதற்கு மற்றோர் உதாரணம் உண்டு. திருவள்ளுவர் குறளின் அருமை பெருமைகளை நன்கு உணர்ந்த பெரியவர்கள் அதனைப் பாராட்டி ஒவ்வொரு பாட்டுப் பாடினார்கள். திருவள்ளுவ மாலை என்ற பெயரோடு அவற்றைத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். ஒளவைப் பாட்டியும் ஒரு பாட்டுப் பாடினாள். ஒளவைக்கு முன்பு இடைக்காடர் என்பவர் ஒரு பாட்டுப் பாடினார். மிகச் சிறிய உருவத்தில் மிகப் பெருக்கமான பொருளைத் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்று சொல்ல வந்தவர், “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' . என்று பாடினார். கடுகைத் துளைத்து அதற்குள் ஏழு கடல்களைப் புகட்டின மாதிரி திருக்குறள் இருக்கிறது என்றார். ஒளவைப் பாட்டி இன்னும் நுட்பமாகச் சொன்னாள். கடுகு என்று சொல்லக் கூடாது. அது கண்ணுக்குத் தெரிவது. பின்னும் நுட்பமாகச் சொல்லவேண்டும் என்று எண்ணினாள். 4C)