பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் எல்லா வகையான ஒழுக்கங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது உயிரும் உடம்பும் சேர்ந்த இந்த வாழ்க்கை. உயிரும் உடம்பும் சேர்ந்து அமைந்து இருப்பதனால்தான் உலகமே வாழ் கிறது. உயிர் தனித்து நில்லாது; உடம்போடு சேர்ந்தே நிற்கும். 'உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே' என்று சொல்வர் திருமூலர். இந்த உடம்பு சோற்றால் அடித்த சுவர். சோறு இல்லாவிட்டால் சோர்ந்துவிடும். நெடுஞ்செழியன் வரலாறு இந்த உண்மையை மறந்து வாழ்ந்தான் பாண்டியன் நெடுஞ் செழியன். அவன் எப்போதும் போரின் மீது நாட்டம் உடைய வனாக, நெடுநாளாக வெற்றி மிடுக்கோடு அரசாட்சி செய்து வந்தான். 'அரசன் போர் புரிவதிலேயே நாட்டம் உடையவனாக இருக்கிறானே! நாட்டில் உள்ளோர் அமைதியாக வாழ்வதற்குரிய காரியங்களைச் செய்யவில்லையே' என்று மக்கள் பேசிக் கொண் டார்கள். போருக்கு வேண்டிய படைக்கலன்களைப் பெருக்குவதி லும், நால்வகைப் படைகளைக் கூட்டுவதிலுமே அவன் நோக்கம் உடையவனாக இருந்தான். குடி மக்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்துகிறார்கள்? நீர்வளம் நிலவளம் எப்படி இருக்கின்றன?? என்று ஆராய்ச்சி செய்யவில்லை. நாட்டில் இருந்த குளங்கள் மேடிட்டுப் போயின. ஏரிகளின் கரைகள் உடைந்திருந்தன. அதனால் நீர் தேங்கவில்லை. விளைவும் குறைந்து விட்டது. இந்த நிலையை அரசனிடத்தில் எடுத்துக் கூறும் தைரியம் யாருக்கும் வரவில்லை. கடைசியில் குடபுலவியனார் என்றும் நல்லிசைப் புலவர், எப்படியாவது இந்தச் செய்தியை அரசன் காதில் போட்டுவிட வேண்டுமென்று துணிந்தார். அவர் அரசனிடம் வந்து வாழ்த்துக் கூறினார். 'நான் சொல்லப் போகும் சில செய்திகளை மன்னன் கவனித்துக் கேட்க வேண்டும்' என்று பணிவோடு விண்ணப்பித்துக் கொண்டார். 'சொல்லுங்கள். கேட்போம்” என்றான் பாண்டியன். குடபுலவி யனார் உலகியல் நன்கு தெரிந்தவர். அரசனுடைய வீரதீரப் பிரதாபங்களைச் சொல்லிக் கொண்டு வந்து இடையில் தாம் சொல்ல வேண்டியதையும் சொன்னார். - 45