பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வலிமையினால் காலனையும் வெல்லும் ஆற்றல் தமக்குக் கிடைத்திருப்பதை மிக்க ஊக்கத்துடன் கூறுகிறார் அருணகிரியார். இத்தகைய பாடல்கள் பலவற்றைக் கந்தர் அலங்காரத்தில் பார்க்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அமைந்திருக் கிறது. காலனையே நோக்கிச் சொல்லும் வகையில் சில உண்டு. இந்தப் பாடல் காலனைப் படர்க்கையில் வைத்துப் பாடியது. இத்தகைய பாடல்களைப் பல முறை பாடிப் பாடிப் பயில்வதனால் நம் மனத்தில் ஒரு வகை உறுதிப்பாடு உண்டாகும். மெல்ல மெல்ல அச்சம் நழுவிவிடும். இந்த அலங்கார மாலையில் முன்புள்ள புத்தகங்களில் சொன்ன சில கருத்துக்கள் இந்தப் புத்தகத்திலும், வரலாம். ஒரே கருத்து வெவ்வேறு பாடலில் வரும்போது அதை விளக்க வேண்டியது அவசியமாகிறது. ஆயினும் கூடிய வரையில் முன் சொன்னவற்றை இங்கே சொல்லும்போது சுருக்கிச் சொல்லியும் வேறு முறையிற் சொல்லியும் விளக்கியுள்ளேன். இலங்கை,பர்மா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இந்த அலங் கார மாலையைப் படித்து மகிழ்பவர் பலர். இந்த மாலையினால் எனக்கு நெருங்கிய நண்பரானவர் பலர். எல்லாம் முருகப் பெருமானுடைய திருவருளே. இன்னும் ஏழு புத்தகங்களில் இந்த மாலையை ஒருவாறு நிறைவேற்றலாம் என்று எண்ணியிருக்கிறேன். முருகன் திருவருள் துணை நிற்க வேண்டும். கி.வா. ஜகந்நாதன்