பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வு இல்லை நினைப்பும், மறப்பும் உடையவர்கள் நாம். இருபத்து நான்கு மணி நேரமும் எப்படி மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு இருக்கிறோமோ அப்படி நாம் என்ற நினைவு நம்மிடம் இருக்கிறது. இதைத்தான் அகங்காரம் (Consciousness) என்று சொல்வார்கள். அதே மாதிரி இறைவனுடைய நினைப்பும் நமக்கு இருக்க வேண்டும். அதுதான் முறையானது. ஆனால் அத்தகைய நினைப்பு நமக்கு இருப்பது இல்லை. யாரேனும் நினைப்பூட்டி னாலோ அல்லது இறைவனை அவசியமாக நினைக்க வேண்டிய நிகழ்ச்சி ஏற்பட்டாலோ அப்போதுதான் அவனை நினைக்க முடிகிறது. - விலங்கு முழு இருட்டில் இருக்கிறது. தேவர்கள் முழு ஒளியில் இருக்கிறார்கள். முழுப் பாவத்தின் விளைவை அநுபவிக்கின்றவை விலங்குகள். முழுப் புண்ணியப் பயனை அநுபவிப்பவர்கள் தேவர்கள். நாமோ, புண்ணியமும், பாவமும் கலந்த மிச்ர கர்மங்களால் பிறவி எடுத்திருக்கிறோம். நாம் இருப்பது ஒளியும் இருட்டும் அல்லாத சாயங்கால மங்கல் வேளை. அதாவது முழு மயக்கமும் இல்லாமல் முழுத் தெளிவும் இல்லாமல் மாறி மாறி வருகின்ற நிலை. யாராவது இறை வனைப் பற்றிச் சொற்பொழிவு ஆற்றினால் இறைவன் நினைவு வருகிறது. நம்முடைய ஆற்றலுக்கு மிஞ்சி ஏதேனும் ஒரு விபத்து நேர்ந்து துயரம் வந்தால், அப்போது நினைவு வருகிறது. புத்தகத்தைப் படித்தால் வருகிறது. மற்றச் சமயங்களில் அந்த நினைவே இருப்பது இல்லை. மனக் கோயில் இறைவனை நினைப்பதற்கு ஏதோதோ புதிய முயற்சி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அமெரிக்காவில் இருக்கிற ஒருவனை நாம் மறந்துவிடுகிறோம். அவனைப் பற்றிச் செய்தி வந்தால் ஒரு கணம் நினைக்கிறோம். காரணம் அவன் வெகுதூரத்தில் இருக்கிறான். இறைவனோ நமக்கு வெகு நெருக்கத்தில் இருக்கிறான். ஆனாலும் அவனை நினைப்பது இல்லை, உணர்வது இல்லை. “நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" க.சொ.V.13 183