பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வு இல்லை 'சாகும் காலம் வரையிலும் மறவாமல் இருப்பவருக்கு எந்தவிதமான தாழ்வும் இல்லாமல் போகும்' என்பது இதன் பொருள். எப்போதும் மறந்து கொண்டிருக்கிற நமக்கு எப் போதும் நினைவு வரவேண்டும். சாகும் வரைக்கும் மறவாமல் இருந்துவிட்டால் செத்த பிறகும் அந்த நினைவு மறையாமல் தொடர்ந்து வரும். சாகிற காலத்தில் மாத்திரம் நினைக்கலாம் என்றால் அது முடியாத காரியம். 'சாகும் காலத்தில் சங்கரா சங்கரா என்று சொல்ல வருமா?’ என்ற பழ மொழியைக் கேட்டிருக்கிறோம். வாழ்க்கையில் இறைவனை நினைப்பதற்கு நம்முடைய நாட்டில் பல வகையான வாய்ப்புகள் உண்டு. கண்ணினாலே காணும் பொருள்களையும், காதினாலே கேட்கும் பெயர்களையும் இறைவனுடைய நினைப்பு வருவதற்குரியன வாகப் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள். வீடுகளுக்கு நடுவிலேயே கோயில்களை அமைத்திருக் கிறார்கள். சோலைகளுக்கு நடுவிலே நந்தவனம் இருக்கிறது. படங்களுக்கு நடுவிலேயே இறைவன் திருவுருவம் இருக்கிறது. கலைப்பொருளுக்கு நடுவில் காட்சி தருகிறான். காவியங்களிலும் நூல்களிலும் அவன் புகழ் உலவுகிறது. இப்படியாக நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் இறைவனை நினைப் பூட்டிக் கொள்வதற்குரிய பொருள்கள் பல பல இருக்கின்றன. இப்படி எல்லாம் அமைத்ததன் காரணமே ஒவ்வொரு கணமும் எம்பெருமானை நினைத்து நாம் வாழவேண்டும் என்பதுதான். இவ்வளவு அடையாளங்கள் இருந்தும் நாம் அவனை மறந்து விடுகிறோம். இறைவனுடைய பெயர்களைக் குழந்தைகளுக்கு வைத்தும் அதை முழுமையாகச் சொல்லாமல் குறுக்கிச் சொல்லிக் கூப்பிடுகிறோம். அதனால் எதற்காகப் பெயர் வைக்கிறோமோ அதன் பயனே கெட்டுப் போகிறது. 2 பல அடையாளங்கள் 'மறவாதவர்க்கு என்றால், எந்தப் பொருளை மறவாதவர்க்கு என்று சொல்ல வேண்டும் அல்லவா? 'முருகப் பெருமானைச் சாகும் காலம் வரையில் மறவாமல் இருப்பவர்க்கு ஒரு தாழ்வு 185