பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 என்று நினைத்தேன். என்னால் சொல்ல முடியவில்லையே: என்று இரங்குவாராம். ஓரளவு அந்த அநுபவத்தைப் பெறுகின்ற வழிகளைத் தெளிவாகச் சொல்லலாம். ஆனால் அநுபவம் எத்தகையது என்று சுட்டிக் காட்ட முடியாது. அருணகிரியாரின் சிறப்பு எவ்வளவு உயர்ந்த நிலை வரைக்கும் சொல்ல முடியுமோ அதுவரைக்கும் சொன்ன பெருமை அருணகிரியாருக்கு உண்டு. அவருடைய பாடல்களில் அவர் பெற்ற அநுபவக் கசிவு தேங்கி யிருப்பதைக் காணலாம். "பெரும்பைம் புனத்தினுட்சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை விரும்பும் குமரனை மெம்யன்பி னால்மெல்ல மெல்லவுள்ள அரும்புந் தனிப்பர மானந்தம் தித்தித் தறிந்தவன்றே கரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே" என்று ஓரிடத்தில் ஒருவகை அநுபவத்தைச் சொன்னார். 'பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கும் அமுதுகண் டேன்செயல் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனம்எற்றித் தத்திக் கரைபுர ளும்பர மானந்த சாகரத்தே' என்று ஓரிடத்தில் சொன்னார். இப்படிச் சொல்கின்ற பாடல்கள் எல்லாம் ஒருவாறு அநுபவத்தைக் காட்டுகின்றன. ஆனால் இன்னதுதான் என்று அநுபவத்தைச் சுட்டிக்காட்ட முடியாது. சுட்டிக்காட்ட முடியாத ஒன்றைச் சுற்றிச் சுற்றிக் காட்டுகிறார். அதனால்தான் ஒரு வகையில் சொல்லாமல் பல பல உருவங் களில் தம் அநுபவத்தைச் சொல்கிறார். அவ்வாறு சொல்கிற பாடல்களில் ஒன்றை இப்போது பார்க்கப் போகிறோம். இன்பத் தாக்கு எனக்கு ஒர் இன்பம் உண்டாயிற்று என்று சொல்ல வரு கிறார். ஒரு மின்சாரக் கம்பி கிழே கிடக்கிறது. அது மின்சார ஒட்டம் உடையது. தெரியாமல் அதன்மேல் ஒருவன் காலை வைத்துவிட்டான். திடீரென்று மின்சாரத் தாக்கு உண்டாயிற்று. அவன் என்ன செய்வான்? இன்னது என்று தெரியாது 'ஏதோ 1983