பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லொணா ஆனந்தம் 'ஷாக்கு அடித்தது” என்று சொல்வான். 'எனக்கு ஓர் ஷாக்கு அடித்தது' என்று அருணகிரியார் சொல்கிறார். அது இன்ப மின் சாரத் தாக்குதலாக அமைந்தது. அது எப்படி வந்தது? "எனக்கே தெரியாது. எந்த இடத்தில் இருந்து வந்தது? எந்த சமயத்தில் வந்தது? ஒன்றும் சொல்லவில்லை. 'ஆண்டவன் திரு வருளால் எனக்கு அந்த மின்சாரத் தாக்குதல் கிடைத்தது' என்று தெரி விக்கிறார். ஆண்டவனைப் பார்த்தே தெரிவிக்கிறார். அத்தகைய அநுபவங்களை நமக்குச் சொல்லவேண்டும் என்று அருணகிரியாருக்கு ஆசை. அந்த அநுபவம் எத்தகையது என்று சுட்டிக்காட்ட முடியாதது. நாமே பல வகை அநுபவங் களைப் பெறுகிறோம். அவற்றை இன்ப துன்பங்கள் என்று வகைப்படுத்தி வைக்கிறோம். இந்திரியங்களின் வாயிலாகப் பெறும் இன்பங்கள் நமக்குத் தெரியும். இன்பம் ஒன்று தமக்குக் கிடைத்தது என்றால் நாம் பெறுகின்ற இன்பத்தைப் போன்றதோ என்ற சந்தேகம் நமக்கு எழும். அந்த இன்பம் இத்தகையது என்று சுட்டிக் காட்ட ஒண்ணாதது. அந்த அருள் அநுபவத்தை அவர் ஒருவகையில் சொல்கிறார். வேதம் இறைவனை அப்படிச் சொல்லுமாம். இறைவன் சுட்டிக்காட்ட ஒண்ணாதவன். வேதம் அவனை அது அன்று, இது இன்று என்று கழித்துக் காட்டுகிற தாம். அப்படியே, நாம் பெறுகின்ற இன்பம் எந்த எந்த இயல்பு களை உடையதோ அந்த இயல்புகள் தாம் பெற்ற இன்பத்திற்கு இல்லை என்று சொல்கிறார். எதிர்மறை வாசகத்தால், தமக்கு அந்த அநுபவம் வந்து சார்ந்த வகையை நமக்குச் சொல்கிறார் அருணகிரியார். சுட்டும் முறை ஏதேனும் ஒரு பொருளைச் சுட்டிக்காட்ட வேண்டுமானால் அது கண்ணாலே காணப்படுவது என்று சொல்லலாம். இன்ன பரிமாணத்தை உடையது என்று சொன்னால் நமக்கு விளங்கும். அப்படிச் சொல்லும்போது உபமானமாக வேறு ஒரு பொருளைச் சொன்னால் பின்னும் நன்கு விளங்கும். இன்னது போல இருக் கிறது என்று சொன்னால் பருமனை உணர்ந்து கொள்ளலாம். பார்க்காத ஒன்றை உணர்ந்து கொள்ளப் பார்த்த ஒன்றை உபமான மாகச் சொல்வது வழக்கம். அந்த மாதிரி சொல்ல முடியாதது இது. அவர் இந்தப் பாட்டை முருகனைப் பார்த்தே பேசுகிறார். க.சொ.V-14 199