பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் ஆத்மா, பரமாத்மா என்ற வேறுபாடு இருக்கிற வரைக்கும் நிழல் உண்டு; அறியாமை உண்டு. இரண்டறக் கலக்கும்போது இந்த நிழலுக்கு இடம் இல்லை. பாசம் அங்கே தன்னுடைய வேலையைச் செய்ய இயலாது. இத்தகைய நிலையையே அருணகிரியார், இராப்பகல் அற்ற இடம் என்று சொல்கிறார். பசுவும் பதியும் இரண்டறக் கலந்துவிடுகிற நிலையில் நினைப்பு மறப்பு இல்லை; இருள் ஒளி இல்லை. இவற்றை நூல்கள் சகல கேவலம் என்று சொல்கின்றன. சகலம், நனவு நிலை; கேவலம் என்பது தூக்க நிலை. சகலம், எல்லாம் என்ற பொருளை உடையது அல்லவா? இப்போது உலகத்தில் எல்லோரும் சகல நிலையில் இருக்கிறார்கள். மூன்று மலங்களும் உடையவர்களைச் சகலர் என்று சாத்திரம் சொல்லும். திரும்பத் திரும்பப் பிறப் பதற்கு அந்த மலங்கள் காரணமாகின்றன. இந்த நிலையில் நாம் சகலாவஸ்தையில் இருக்கிறோம்; அதாவது நாம் இப்போது பொருள்களைக் கண்டும் கேட்டும் இருக்கிற நிலை கேவல சுத்த அவஸ்தைகள் கேவலாவஸ்தை என்பது ஒன்று. அது ஒன்றும் தெரியாமல் மறந்து கிடக்கும் நிலை. நாம் தூங்கும்போது புண்ணியமோ பாவமோ செய்வதில்லை. தெளிவு பிறக்காத நிலை அது. அதையே கேவலம் என்று சொல்வார்கள். முழு இருட்டிலும் தூங்கலாம்; முழு ஒளியிலும் தூங்கலாம். ஒன்று மயக்கத் தூக்கம்; மற்றொன்று ஒளித் தூக்கம். இருட்டுத் துக்கம் மேலும் பிறவியை உண்டாக்குவது. ஒளித் தூக்கம் பிறவியை வேரறுப்பது. இப்படித் தூங்குகிற தூக்கமே நினைப்பும் மறப்புமாகிய இரண்டும் அற்ற நிலை; இரவு பகல் அற்ற இடம் என்பதும் அதுவே. தெளிவு மயக்கமாகிய இரண்டும் மாறி மாறி இங்கே வருவதில்லை. எல்லாம் முழுத் தெளிவாக இருக்கும். இதனைச் சுத்த அவஸ்தை என்று சொல்வார்கள். அந்தத் தெளிவில் எது உண்மைப் பொருளோ அதுதான் தெரியும். கனவில் சாப்பிடுவது போலவும், எழுந்து ஒடுவது போல வும் காண்கிறோம். கனவு கலைந்தவுடன் எல்லாம் பொய் என்று தெரிகின்றன. கனவிலேயே கனவு காண்பதும் உண்டு. அடுத்து, 'இது கனவு அல்லவா?' என்று கனவிலேயே நினைக்கிறோம். 223