பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் அராப்புனை வேணியன் முருகப் பெருமானுடைய தந்தை சிவபெருமான் என்பது நமக்குத் தெரியும். இங்கே அவரைப் பெருமையாகச் சொல்லா மல் நாகப்பாம்மைத் தலையில் அணிந்து கொண்டிருக்கிறவன் என்று சொல்கிறார். இப்படி ஏன் சொல்லவேண்டும்? இதற்கு ஏதாவது குறிப்பு உண்டா? முருகப் பெருமானது குடும்பம் எத்தன்மை வாய்ந்தது? பாம்புக்கு அஞ்சாத குடும்பம் அது; பாம்பையும் வளர்த்து, சாதுப்பிராணியாக்கிய குடும்பம். பாம்பு மனிதன் கண்ணில் படாமல் புற்றில் ஒளிந்து கொண்டிருக்கும். மக்கள் போக முடியாத இடங்களில் வாழும். அது தன்னிடத்தில் நஞ்சுடையது. ஆகையால் அப்படி ஒளிந்து வாழ்கிறது. “நஞ்சுடைமை தான்.அறிந்து நாகம் கரந்துறையும்." நாம் பாம்பைக் கண்டு பயப்படுகிறோம். உண்மையில் அதுதான் நம்மைக் கண்டு பயப்படுகிறது. அதனால் புற்றுக்குள் ஒளிந் திருக்கிறது. பகலில் வெளியில் தலை காட்டுவது இல்லை. அத்தகைய பாம்பை எல்லோரும் காணத் தன் தலைமேல் வைத்துக் கொண்டிருக்கிறவன் சிவபெரு ழான். அங்கே அது யாருக்கும் அஞ்சாமல் இருக்கிறது. கருடன் நிழல் பட்டாலே பாம்பு மயங்கிவிடும். ஒரு சமயம் திருமாலுடைய வாகனமாகிய கருடன் மேலே பறந்து சென்ற தாம். இந்தப் பாம்பு, 'கருடா கருடா சுகமா?' என்று கேட்ட தாம். அதற்குக் கருடன், இருக்கிற இடத்தில் இருந்தால் எல்லாம் சுகந்தான்' என்று பதில் சொல்லியதாம். இயற்கையான இடத் தில் இருந்தால் பாம்பு கருடனைக் கண்டு அஞ்சும் இப்போது மிக உயர்ந்த இடத்தில் - சிவபெருமானுடைய சடாபாரத்திலேயே இருப்பதால் அந்த அச்சம் போய்விட்டது. ஒளியைக் கண்டு, கருடனைக் கண்டு அஞ்சிப் புற்றுக்குள் கிடக்கும் இயல்பு இப் போது மாறிவிட்டது. நம் மனம் அந்தப் பாம்பைப் போன்றது; புற்றுக்குள் இருக்கும் பாம்பைப் போன்றது. இது நல்லது ஆக வேண்டும். நஞ்சு கக்குகிற நாகத்தை, நான்குபேர் அறியப் புறப்படாத நாகத்தை, கருடனுக்குப் பயப்படுகிற நாகத்தை எல்லோரும் 227