பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனித் திருநாமம் வரும் வரைக்கும் கணபதி காத்திருந்தார். முருகன் உலகத்தை விரைவில் வலம் வந்து வாயிலுக்குள் நுழையும் சமயம் பார்த்து வாயிலில் போய் நின்று அந்தப் பழத்தைத் தின்னத் தொடங்கி னார். அவர் தின்னுவதைக் கண்ட முருகன் உண்மையை ஊகித்துக் கொண்டான். நம்மை உலகத்தைச் சுற்றும்படி செய்து விட்டு நம் தந்தையார் நம் அண்ணாவுக்கு அல்லவா பழத்தைத் தந்துவிட்டார்?' என்று எண்ணிச் சினம் வந்தவனைப் போலப் புறப்பட்டுவிட்டான். ஆடை அணிகளை எல்லாம் கழற்றிவிட்டுத் துறவி போல நேரே பழனி மலையின் உச்சிக்குச் சென்று நின்று விட்டான். இதனை அறிந்த சிவபெருமான் உமாதேவியாரோடு சென்று, "நீயே பழம் ஆயிற்றே; உனக்கு வேறு பழம் எதற்கு? பழம் நீ" என்று சொல்லிச் சமாதானப்படுத்தினார்களாம். அது முதல் இந்தத் தலத்திற்குப் பழம் நீ என்ற பெயர் வந்தது. அதுவே பழனி என்று ஆயிற்று. இது எப்போது நடந்தது. யார் பார்த்தார்கள் என்ற கேள்வி களுக்கு இடம் இல்லை. முருகப்பெருமானே நமக்கு அது பூதியைத் தரும் சுவை மிக்க கனி என்ற ஓர் உண்மையை இந்த வரலாறு காட்டுகிறது. இதனை நாம் மனத்தில் கொண்டால் நிகழ்ச்சியைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இறைவனுடைய அருள் அநுபவத்தைப் பற்றிக் கவனிக்கலாம். அரோகரா! இப்படிச் சங்க நூல்களிலும், புராணங்களிலும் பெருமை பெற்றது. பழனி. இன்றும் பழனி மலையில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பழனி ஆண்டவனுக்கு அரோகரா என்று சொல்லி மலை ஏறுவதைப் பார்க்கலாம். பக்தர்கள் அல்லாதவர்களுக்கும் மனம் உருகும். அண்ணாமலைக்கு அரோகரா என்று அரோகரா சப்தம் தொடங்கியது. அரனுடைய திருநாமமே அது. ஆனால் நாளடைவில் அந்தச் சப்தத்தைப் பழனி ஆண்டவனே வாங்கிக் கொண்டான். அரோகரா என்றால் இப்போது நமக்குப் பழனிதான் நினைவுக்கு வரும். பல நோயாளிகளும், ஏழைகளும் அங்கே சென்று தம்முடைய நோயும், வறுமையும் தீர்ந்து இன்புறுகிறார் கள். முதிர்ந்தவர்கள் கூடப் பிரார்த்தனை செய்துகொண்டு அங்கே 257