பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 சென்று மலை ஏறித் தரிசனம் செய்யும் ஆற்றலைப் பெறுகிறார் கள். அருணகிரியார், "அதிசயம் அநேகமுற்ற பழனிமலை’ என்று திருப்புகழில் பாடியிருக்கிறார். 'இத்தகைய சிறந்த தலத்தின் பெயரைக்கூட நீ சொல்ல வில்லையே' என்று இப்போது தம்முடைய நெஞ்சுக்கு உரைப் பாரைப் போலச் சுட்டிக்காட்டுகிறார். படித்தல் படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பாவது, பலமுறை சொல்வது. 'படித்துப் படித்துச் சொல்கிறேன் என்று உலக வழக்கிலும், பலமுறை சொல்வதைக் குறிப்பிடுவது வழக்கம். திருநெல்வேலிக்காரர்கள் பாடுவதையே படிப்பது என்று சொல்வார்கள். பாடம் பண்ணி இங்கே பாடு வதையே படித்தல் என்று கொள்ளவேண்டும். மீட்டும் மீட்டும் அதைச் சொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு பொருள் இனிக்கு மானால் அதை நாவில் வைத்துப் பலதடவை சுவைப்போம். விழுங்குகிற பொருளைக் காட்டிலும் வாயில் வைத்துச் சுவைக் கின்ற பொருளுக்கு இனிமை அதிகம். வாயில் வைத்துச் சுவைக் கின்றவையெல்லாம் உண்ணும் பொருள்களே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோாம். ஆனால் பெரியவர்களுக்கு இறைவன் திருநாமம் தின்பண்டம் போல இனிக்குமாம். இனிக்கின்ற ஒரு பொருளைப் பலமுறை நாவினாலே சுவைக்க வேண்டும் அல்லவா? ஆகையால் இறைவனுடைய திருநாமத்தையும் பலகாலம் சொல்லிச் சொல்லி அதனால் உண்டாகிற இன்பத்தைப் பெறுவது பக்தர்கள் இயல்பு. இங்கே பழனி என்ற திருநாமத்தை நீ பலகாலமும் சொல்லவில்லையே என்ற பொருளில், படிக்கின்றிலை பழனித் திருநாமம் என்று சொன்னார். அடியார்களைச் சார்தல் அடுத்தபடியாக ஒன்று சொல்கிறார். 'பழனியின் பேரைச் சொன்னால் அதைப்பற்றிய நினைவு உன்னிடம் இருக்கும். பல 258