பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனித் திருநாமம் என்று மணிவாசகப் பெருமான் சொல்கிறார். எடுத்தவுடன் ஆடு இன்றிலை என்கிறார். அதுதான் நடித்தல். நடித்தல் என்றால் பாவனை செய்தல் என்று இங்கே பொருள் கொள்ளக் கூடாது; நடனம் செய்தல் என்று கொள்ள வேண்டும். பஜனைக் கோஷ்டியில் தம்மை மறந்து கூத்தாடுகின்ற பக்தர்களை நாம் கண்டால் நாமும் ஆடவேண்டுமென்ற உணர்ச்சி எழுகிறது. வேண்டுமென்று கூத்தாடுவது வேறு; உள்ளே உள்ள பக்தியின் விளைவாகக் கூத்தாடுவது வேறு. கோபம் உள்ள வனுக்கு உடம்பு பதறுவது போல, பக்தி உணர்ச்சிமிக்கவனுக்குக் கூத்தாடும் நிகழ்ச்சி இயல்பாக உண்டாகும். அதுதான் மெய்ப் பாடு. மாசு மறுவற்ற உள்ளத்தில் பக்தி உண்டானால் அவர் களுக்கு ஏற்படும் கிளுகிளுப்பில் ஆடுவார்கள்; கதறுவார்கள்; பாடுவார்கள். குழந்தை மகிழ்ச்சி வந்தால் எப்படிக் குதித்துக் கூத்தாடுகிறதோ அப்படித்தான் அவர்கள் இருப்பார்கள். நாம் குழந்தைபோல ஆக வேண்டும். அப்படி ஆனால் நாணம் இல்லாமல் இறைவனை நினைந்து ஆனந்தம் உறுகின்ற நிலை வரும். குழந்தை அம்மாவைக் கண்டு விட்டால் ஓடி வந்து கட்டிக் கொள்கிறது. கொஞ்சம் வயசான பிற்பாடு அந்தக் குழந்தை கட்டிக் கொள்வானா? நாம் இப்போது அம்மாவை விட்டு விலகி நிற்கிறோம். நமக்கு வயசு ஆகிவிட்டது. உலக இயல் அநுபவம் மிக்கதுதான் காரணம். உலகத்திலுள்ள தாயினிடத்தில் இப்படி நடந்து கொள்வது இயற்கை; நேர்மையும்கூட. அதற்கு நேர்மாறாக, ஆண்டவனாகிய தாயினிடத்தில் நடந்து கொள்ள வேண்டும். வரவரக் குழந்தை யாகி நாணத்தைவிட்டு அவனுடைய சந்நிதானத்தை அடைந்து கூத்தாட வேண்டும்; குதிக்க வேண்டும். உள்ளத்தில் உலக நினை வாகிய மாசு இருக்கிற வரைக்கும் கூத்தாடுவதற்கு நாணுவோம். கூத்தாடுகிறோமே என்ற எண்ணமே இல்லாமல் இயற்கையாக 'அந்த நிலை வந்துவிட்டால் நாணமும் நழுவி விடும். பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி நடிக்கின்றிலை என்று சொல்லும்போது அருணகிரியார் படிப்படியாக விளை கின்ற மெய்ப்பாடுகளை நமக்கு நினைப்பூட்டுகிறார். 265