பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கத்துக்கு முறிவு எனறால் அவனைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அவன் எப்போதும் ஐராவதத்தில் செல்கிறவன். இந்தக் காலத்தில் பெரிய பணக்காரர்கள் தான்கைந்து காாாவது வைத்திருப்பார்கள். பழங் காலத்தில் சிறந்த அரசக் எருடைய செல்வத்திற்கு அறிகுறி யாகத் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும் வைத் திருப்பார்கள். யானை இருப்பது பெரிய செல்வத்திற்கு அ.ை யாளம். 'கஜாந்த ஐச்வர்யம்' என்று சொல்வார்கள். ள் தங்க, ஐராவதம் இந்திரனோ வேறு யாருக்கும் இல்லாத பெரிய யானையை உடையவனாக இருக்கிறான். அந்த யானைக்கு நான்கு கொம்பு. மற்ற யானைகள் கரிய நிறம் உடையனவாக இருக்க, அவன் யானையோ வெள்ளை நிறம் உடையது. சாமான்ய வெள்ளை நிறம் அன்று; பளபளக்கும் வெள்ளி போன்ற வெள்ளை நிறம். அது நடந்து வருவதைப் பார்த்தால் வெள்ளி மலையே கால் படைத்து நடந்து வருகிறதோ என்று தோன்றும். அதன்மேலே இந்திரன் அமர்ந்திருப்பான். தேவ ராஜனுக்குத் தான் வாகனம் என்ற மிடுக்கினாலே அது தன் காலை வாங்கி நடக்கும்; இறு மாப்போடு நிற்கும். இந்திரனுடைய போகத்தையும், செல்வச் சிறப்பையும், பதவியையும், பெருமையையும் அளவிட்டுச் சொல்லவொண்ணாது. அவனுடைய மனைவிக்கு எவ்வளவு பெருமை இருக்கும்! அவள்தான் இந்திராணி. வெள்ளி மலை எனவே கால்வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி. இந்திரனும் சூரனும் தன்னுடைய இந்திர லோகத்தில் தனக்கென்றே அமைந்த ஐராவதம், காமதேனு, கற்பகம், உச்சைசிரவம், சிந்தாமணி முதலிய பலவகை அங்கங்களையும் குவித்துக் கொண்டு போகத்தில் மூழ்கி இருந்த இந்திரன் இறைவனையே மறந்துவிட்டான். அவனுக்கு அறிவு கொளுத்தவேண்டும் என்று ஆண்டவன் எண்ணிச் சூரபன்மன் என்ற அசுரனைத் தோற்றுவித்தான். அவன் சர்வ லோகங்களையும் தன் ஆளுகைக்குள் அடக்கி, சர்வப் பிரபஞ்சத்தையும் தானே தனி மன்னனாக ஆளவேண்டுமென்று ஆசைப்பட்டான். அவன் ஆயிரத்தெட்டுக் கோடி அண்டங்களுக் 231