பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கத்துக்கு முறிவு கட்டியிருந்த நூலை வாங்கியிருப்பாள். அவள் நூலை வாங்காமல் இருந்ததற்குக் காரணம் முருகன் வேலை வாங்கியதுதான். இறைவன் கையில் இருந்த வேல் தன்னுடைய வீரத்தால் இந்திராணியின் கழுத்தில் இருந்த நூலைக் காப்பாற்றியது. எல்லாவிதமான போகங்களையும் அடைந்தும் இந்திராணியின் கழுத்தில் கட்டிய நூலைக் காப்பாற்றும் ஆற்றல் இல்லாதவனாக இந்திரன் இருந்தான். அத்தகைய இந்திரனின் சோர்வை அகற்றி, வலியின்மையை மாற்றி, பாதுகாத்தவன் முருகப் பெருமான். 'பெரும் போகத்தில் வாழ்ந்த இந்திரனே துன்புற்றான் என்றால், சேல்வாங்கு கண்ணியர் மயலில் ஆழ்ந்து, இருக்கிற அறிவையும் பறிபோகவிட்டு மயங்கிக் கிடக்கிற உனக்கு என்ன நன்மை உண்டாகப் போகிறது? அன்று வேலை வாங்கின. பெருமானுடைய தாமரை போன்ற திருவடியை நினைத்து அன்பு செய்வாயாக' என்று நெஞ்சைப் பார்த்து உபதேசம் செய்கிறார். மால்வாங்கி ஏங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவே கால்வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில் கட்டும் நூல்வாங்கி டாது அன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே! நோக்கும் காலம் வேல்வாங்கி என்பதற்கு வேலை வாங்கினவன் என்று பொருள். அன்று என்பது, பழங்காலத்தில் நடந்த கதையைச் சுட்டியது. அதைப் பண்டறி சுட்டு என்பார்கள். முருகப் பெரு மானுடைய கழலை நோக்க வேண்டும். சேல்வாங்கு கண்ணியரிடத் தில் சேருவதற்கு முன்னாலே நோக்கலாம். அப்படி நோக்கினால் தெளிவு பெறலாம். அவர்களைப் பார்த்த பிறகும் கழலைப் பார்க்கலாம். அப்போது பயோதரம் சேருகின்ற எண்ணம் இல்லா மல் இருக்கும். அப்படிச் சேர எண்ணிய பிற்பாடும் பார்க்கலாம். அப்போதும் அந்த நினைவு மால் வாங்காத நிலையை நமக்குத் தரும். மயல் உள்ளத்தில் தோன்றிய பிறகும் வேல் வாங்கி பூங்கழல் நோக்கலாம். அப்போது உள்ளத்தில் ஏக்கம் வராமல் இருக்கும். பயோதரம் சேர எண்ணி, மால் வாங்கி, ஏங்கிய பிறகும் பார்க்க வாய்ப்பு உண்டு. அந்தச் சமயத்தில் பார்த்தாலும் மயக்கம் இல்லாமல் இருக்கலாம். மயக்கம் அடைந்த பிற்பாடும் 293