பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் கொண்டு போவர்? இறந்துவிடுகிறான். அந்தப் பொருள்கள் அவனோடு போகின் றனவா? இல்லை. நிலையாமை ஒன்றுதான் இந்த உலகத்தில் இருக்கிற உண்மை. 'நெருநல் உளன்.ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் உலகு." எத்தனையோ மக்கள் பிறந்து பொருள் ஈட்டி வாழ்ந்தாலும் முடிவாக இறந்து போகிறார்கள். பிறந்தவர்கள் எல்லோரும் பொருள் ஈட்டிக் கொள்வது நிச்சயம் அன்று. அவர்கள் எத்தனை காலம் வாழ்வார்கள் என்றும் உறுதி சொல்ல முடியாது. அவர்கள் மணம் செய்து கொள்வார்களா, இல்லையா என்பதை வரையறை யாகச் சொல்ல முடியாது. அப்படிச் செய்துகொண்டாலும் குழந்தைகள் பிறக்கும் என்ற உறுதியும் சொல்ல முடியாது. உறவினர்கள் அவர்களுக்குக் கிடைப்பார்கள் என்ற நிச்சயமும் இல்லை. படிப்பார்களா, உத்தியோகம் செய்வார்களா, பணம் ஈட்டுவார்களா, ஊர் சுற்றுவார்களா, நோய் இல்லாமல் வாழ் வார்களா என்று கேட்டால் இந்தக் கேள்விகளில் எதற்கும் உறுதியாக விடை சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மாத்திரம் உறுதி. பிறந்தவர்கள் செத்துப் போவார்கள். வாழ்ந்தாலும் வாழா விட்டாலும், பணம் ஈட்டினாலும் ஈட்டாவிட்டாலும், மணம் புரிந்து கொண்.ாலும் புரிந்து கொள்ளாவிட்டாலும், குழந்தை குட்டிகளைப் பெற்றாலும் பெறாவிட்டாலும், நோய் உடைய வனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருநாள் நிச்சயமாக மனிதன் செத்துப் போகத்தான் வேண்டும். நிலையான பொருள் சாகும்போது அவனுடன் தொடர்ந்து நெருங்கியிருக்கின்ற அனைத்தும், உடம்பையும் உள்ளிட்டு அவனுக்குப் பயன் படாமல் விலகிவிடும். இப்படி உயிர் உலக வாழ்க்கையை விட்டுப் போகும்போது, நழுவிவிடுகிற பொருள்களிலே மனிதன் பற்று வைப்பதனால் பயன் இல்லை. இந்த உடம்பு இறந்து படுவதைக் கண்முன்னால் பார்த்தும், இதனால் கிடைக்கும் இன்பத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இன்பம் என்பது மனத்தினால் அமைகிற ஒன்றே தவிர வெளிப்பொருள்களினால் உண்டாவ தில்லை. நிரந்தரமாக நமக்கு இன்பம் வரவேண்டுமானால் எப் 303