பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 எளிய செயல் மனைவியை மணப்பதும், பணத்தை ஈட்டுவதும், மாளிகையை கட்டுவதும் ஆகிய காரியங்கள் பெரும் முயற்சியினாலே உண்ட வன. ஆனால் கூர்கொண்ட வேலனைப் போற்றுவதற்குப் பெரி. முயற்சி வேண்டியதில்லை. நமக்கு மனம் இருக்கிறது. வா. இருக்கிறது. உடம்பு இருக்கிறது. அவற்றைக் கொண் எல்லோருமே வேலனைப் போற்றலாம். பணம் இல்லாதவ. மனைவியைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது. தொழி: செய்ய முடியாது. வீடுகட்ட முடியாது. ஆனால் முருகனை நினைக்கலாம். உலகத்திலுள்ள எல்லா மக்களும் கல்யாண பண்ணிக் கொள்ள முடியும் என்று சொல்ல முடியாது. வீடு கட்ட முடியும் என்று சொல்ல முடியாது. உறவினர்களைப் பெறு வார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆனால் முயன்றால் எல்லோருமே ஆண்டவனுடைய அருளைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம். அதற்கு வேண்டிய உறுப்புக்கள் உடம்பும், வாயும் மனமுமே. மனிதர்களுக்கு இவை இருக்கின்றன. எளிதில் இவை நமக்குக் கிடைத்தும் அந்த ஏற்றமான காரியத்தைச் செய்யாமல் மிகவும் முயன்று சம்பாதித்த பொருள்களிடத்தில் ஈடுபட்டு அவற்றையே பெரியனவாகப் போற்றி அவற்றை உடைய நிலை தான் ஏற்றமான நிலை என்று கொண்டாடிக் கொண்டிருப்பது மாயையின் விளைவு. இந்த விளைவினால் வருகின்றது துன்பம் இது மாற வேண்டுமானால் உலகில் வாழும் போதே கூர்கொண்ட வேலனைப் போற்ற வேண்டும். அப்படிப் போற்றுவதுதான் ஏற்றம் என்று கொண்டாட வேண்டும். அப்படிப் போற்றுகிறவர் களையே ஏற்றம் உள்ளவர்களாகக் கொண்டாடி வணங்க வேண்டும். இறைவனைப் போற்றுவதற்குரிய கரணங்களை எல்லாம் பெற்றிருந்தும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணாகப் பொழுது போக்குகின்றவர்களைப் பார்த்து, கெடுவீர்! என்று கூறுகிறார். 'வீணாகப் போகிறீர்களே கேட்டை அடை வீர்கள் என்பது பொருள். அவர்கள் அறியாமையினால் அப்படிச் செய்கிறார்கள். ஆகையால், 'உங்கள் அறிவின்மை இருந்தவாறு என்னே!" என்ற பொருளில் 3 1C