பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி சுகம் எல்லாவற்றையும் பெறலாம். வேறு சில நாடுகளில் பிறந்திருந்தால் சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியில் நிபுணனாக வாழலாம். மனிதப் பிறவியின் பயன் இகலோக வாழ்வு என்று மட்டும் இருந்திருந்தால் அத்தகைய நாடுகளில் பிறப்பது சிறந்த பிறவி என்று கொள்ளலாம். ஆனால் இம்மை வாழ்வு முழுவதும் மறுமை வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கிறது. இப்போது நாம் கொள்கிற குணங்கள் அனைத்தும் இனி வரும் இன்ப துன்பங்களின் அடிப்படையாக இருக்கின்றன. ஆகவே, வீடடைதல் நம் லட்சியமாக இருந்தால் இந்த வாழ்வு முழுவதும் வீட்டுக் குரிய நெறியாக அமைய வேண்டும். அதற்கேற்ற வசதியை வேறு நாடுகளில் பெறுவதைக் காட்டிலும் பாரத நாட்டில் பெறுவது சிறந்தது. இறைவன் பூசை இந்த நாட்டில் இறைவன் பூசைக்குச் சிறப்பு அதிகம். மற்ற நாட்டிலுள்ள மக்களும் இறைவனை வணங்கி வழிபடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய வழிபாட்டுக்கும் நம் வழிபாட்டுக்கும் வேறுபாடு பல உண்டு. மற்ற நாடுகளில் கூட்டமாகச் சென்று இறைவனை வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. அவரவர் களுக்கு என்று மடமோ, கோயிலோ வைத்துக் கும்பிடுகிறார்கள். குருநாதன் முன்னிலையில் கூடிக் கூட்டு வழிபாட்டை நடத்து கிறார்கள். கிறிஸ்துவ மதத்தில் ஞாயிறுதோறும் மாதாகோயில் சென்று, பாதிரியார் பிரார்த்தனை செய்ய, எல்லோரும் கூடி யிருந்து வழிபடுகிறார்கள். தம் தம் ஆசனத்தில் இருந்து பிரார்த் தனை செய்கிறார்கள். பள்ளிக் கூடங்களில் காலை நேரத்தில் பிரார்த்தனை வகுப்பு நடக்கிற மாதிரி அந்தப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறும். இஸ்லாமிய நண்பர்களும் மசூதிகளில் ஒன்றாகக் கூடி இறைவனை வழிபடுகிறார்கள். தனியேயும் தொழுவது உண்டு. ஆனாலும் கூட்டமாகச் சென்று தொழுவதிலே அவர்கள் சிறப்பைக் காணுகிறார்கள். இத்தகைய கூட்டு வழிபாடு நமக்கும் உண்டு. திருக் கோயிலில் இந்த வழிபாட்டைப் பார்க்கலாம். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு திருவிழாவைக் கண்டு களித்து இன்புறுகிறார்கள். பஜனை மடங்களை நிறுவி வாரந்தோறும் ஒரு நாளில் எல்லோ 25