பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி கொள்ளலாம் என்றால், நிச்சயமாக அந்த நினைப்பு அப்போது வாராது. பிற்காலத்திற்குச் சேமித்து வைக்க வேண்டுமென்ற அறிவை மனிதன் பெற்றிருப்பதனால், அந்த அறிவுக்கு ஏற்ப இறந்த பிறகு வாழும் வாழ்க்கைக்கு எது உரியது என்று தெரிந்து கொண்டு அதனைச் சேமித்து வைக்க வேண்டும். - எதைச் செய்வது? அறிவினால் நல்லன எது என்று தெரிந்து கொண்டு அவற்றை நாம் செய்யவேண்டுமென்று பெரியவர்கள் சொல் கிறார்கள். இங்கே ஒரு மயக்கம் வரும். நம்முடைய நாட்டில் எத்தனையோ தலங்கள் இருக்கின்றன. பலவகையான கோயில் கள் உள்ளன. தானம், தர்மம், தவம் ஆகியவற்றில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. குருமார்களும் பலர் இருக்கிறார்கள். சத்சங்கங்களும் அங்கங்கே பல நடந்து வருகின்றன. பஜனை செய்வாரும், கூட்டாக வழிபடுவாரும், தனித்திருந்து தியானம் செய்வாரும் நிறைய இருக்கின்றனர். இப்படி இறைவன் அருளைப் பெறுவதற்காகப் பண்ணுகிற முயற்சிகள் கணக்கு வழக்கு இல்லாமல் இருக்கின்றன. எல்லாவற்றிலும் நாம் கலந்து கொண்டால் நல்லது என்று நமக்குத் தோன்றுகிறது. அது நம்மால் முடிவதில்லை. ஆகவே நம்மாலே எதுவும் செய்ய முடியாது என்று சிலர் தளர்ந்து போகிறார்கள். இந்த நிலையில், நம்முடைய மனத்தைத் தேற்றிக் கொள்வ தற்கும், அநுபவபூர்வமான செயலில் இறங்குவதற்கும் நாம் ஓர் எண்ணத்தை மேற்கொள்ளவேண்டும். உலகத்தில் எத்தனையோ நல்லவை இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் ஒரு மனிதன் செய்ய இயலாது. ஆனால் அவன் செய்வனவெல்லாம் நல்லவன வாக இருக்கலாம். திருச்செந்தூருக்குப் போகவேண்டுமென்று நாம் நினைத்தால் அந்தச் சமயம் பார்த்து ஒர் அன்பர், 'பழனிக்குப் போனால் நன்றாக இருக்கும்" என்று சொல்வார். மற்றொருவர், 'திருத்தணி நமக்கு அருகில் இருக்கிறதே; அங்கே போகலாம்' என்று சொல்வார். பின்னும் ஒருவர், "சென்னையிலேயே வடபழனி இருக்கிறதே; அங்கே போய்விடலாம்' என்று யோசனை சொல் வார். அத்தனை பேரும் சொல்பவை நல்லவையே. எல்லோ ருடைய பேச்சையும் கேட்டு நடக்க முடியுமா? ஒன்றும் அறியா 47