பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி வருகிறான். விசுவரூபம் எடுக்கிற ஆற்றல் உள்ள பெருமானே கண் காணுகின்ற அளவிலே மனிதனைப் போன்ற உருவத்தை எடுத்து வருகிறான். இது அவன் கருணையினால் செய்வது. அப்படி வரும்போது அவனுக்குப் பெருமை, வரவரக் குறுகிக் கொண்டு வருவது. நமக்குப் பெருமை உயருதல்; அவனுக்குப் பெருமை தாழ்தல். அவன் எத்தனைக்கு எத்தனை சிறியவனாக வருகிறானோ அத்தனைக்கு அத்தனை அவன் கருணை மிகுதி யாக விளங்குகிறது. சிற்றடி முருகப் பெருமானோ குழந்தையாகவே வந்துவிட்டான். நாம் பற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிற அந்தத் திருவடி வேதங்களால் சொல்லப்பட்டது; பூவுலகங்களை எல்லாம் கடந்துள்ளது என்று சொன்னால் மயக்கம் உண்டாகும். ஆகவே மிகப் பெருங்கருணையினால் சின்னஞ் சிறு அடியை உடைய வனாக, தளர் நடையிட்டு, நாம் அணுகக் கூடிய குழந்தை உருவத் தோடு வருகிறான். அவன் சிற்றடியை, “சிற்றடியும் முற்றிய பன்னிரு தோளும்' என்று பாடுவார் அருணகிரியார். அவன் பெரிய திருவடி சிறுத்த தற்குக் காரணம் நாம் சிறியவர்களாக இருப்பதுதான். தான் சிறுமையை ஏற்றுக் கொண்டு நாம் பெருமையை அடைய வேண்டு மென்ற கருணையினால் அவன் இறங்கி, இளைய வனாக, குறு கியவனாக, சிறிய அடியைக் கொண்டு வருகிறான். கண்ணனும் அப்படி வந்தான். மற்ற எந்த உருவத்திலும் சிறிய அடி இல்லை. தன் அடியை நம் மனத்தில் வைப்பதற்காக அல்லவா அவன் அப்படி வருகிறான்? நம்முடைய மனம் விரிந்தது அல்ல என்று நமக்கே தெரியும். உலக இயலில் ஈடுபடு கிறவர்கள்கூட யாரை யாவது குறை சொல்ல வேண்டுமானால் 'விரிந்த மனம் இல்லா தவர் என்று சொல்கிறார்கள். உண்மையில் இறைவனை வைத்துக் கொள்ளக் கூடிய விரிவு இந்த மனத்திற்கு இல்லை. பெரிய பணக்காரன் ஒருவன் நல்லவனாக இருக்கிறான். அவனுக்கு ஏழையாகிய ஒரு நண்பன் இருக்கிறான். மாளிகையில் இருக்கிற பணக்காரனை, “எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்' என்று அந்த ஏழை அழைக்கிறான். ஏழை குடிக்கூலி கொடுத்துச் 57