பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 சூரசங்காரம் - உலகம் போற்றத் தேவர்களுக்கு விடுதலை அளித்து, மகிழ்ச்சி ஊட்ட ஆறுமுகநாதன் அவதாரம் பண்ணிச் சூரசங்காரம் செய்தான். தேவர்களுடைய சேனைகளுக்குத் தலைவனாக இருந்த ஆறுமுகநாதன், சூரசங்காரம் செய்து அமராவதியை மீட்டுத் தேவராஜனிடம் கொடுத்தான். காமதேனுவை மீட்டுக் கொடுத் தான். தேவசேனாபதி என்று தேவர்கள் அவனை வணங்கிப் பாராட்டினார்கள். தேவசேனாபதியாக, அமரர் படைக்குக் காவலனாக இருந்து அந்தப் பெரிய போரை நடத்தி வெற்றி பெற்றான் எம்பெருமான். திருச்செந்தூருக்கு வந்து, நான்முகன் முதலியவர்களுடைய பூசையை ஏற்றுக் கொண்டு, திருப்பரங் குன்றம் அடைந்தான். இந்திரன் வேண்டுகோள் தன்னுடைய அரசை மீட்டும் வாங்கிக் கொடுத்த ஆறுமுகப் பெருமானுக்குத் தேவேந்திரன் தன் பெண் தேவசேனையை மணம் செய்து வைக்க நினைந்து, இந்திராணியையும் தேவ சேனையையும் மேருமலையிலிருந்து அழைத்து வரச் சொன் னான். எல்லாத் தேவருடனும் எம்பெருமானிடத்தில் சென்று ஒரு விண்ணப்பம் செய்து கொண்டான். 'எம்பெருமானே! போர் நடந்த காலத்து அமரர் சேனைக்குக் காவலனாக இருந்தாய்; தேவசேனாபதியாக இருந்தாய். இனிச் சண்டை இல்லை. என்றாலும் தேவசேனாபதி என்ற பட்டம் மாறக்கூடாது. சண்டை போடுகிற தேவசேனாதிபதியாக இல்லாவிட்டாலும், என் மகள் தேவசேனைக்குப் பதியாக இருந்து அருள் வழங்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டான். 'உலகம் எல்லாம் போற்றுகின்ற பெருமானே! உன் திரு வருள் இல்லாவிட்டால் எங்களுக்கு வாழ்வு ஏது? அமராவதி ஏது? காமதேனு ஏது? சூரபன்மனை எதிர்க்கச் சக்தி இல்லாத தனால் அவை எல்லாவற்றையும் நாங்கள் இழந்து நின்றோம். உன் திருவருளால் அவற்றையெல்லாம் மீட்டும் நாங்கள் பெறச் செய்தாய். இதற்கு நாங்கள் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டாமா? பலகாலம் உன் பெருமை விளங்கிக் கொண் டிருக்கும்படியான அடையாளப் பரிசு ஒன்று கொடுக்க வேண்டாமா? 66