பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 முசுகுந்தன் முசுகுந்த சக்கரவர்த்தி கருவூரிலிருந்து சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் இந்திரனுக்கு மிகவும் வேண்டியவன். ஒரு காலத்தில் வலம்புரி என்னும் அசுரன் இந்திரனைச் சண்டையில் தோல்வியுறச் செய்து அழிக்க இருந்தபோது முசுகுந்த சக்கரவர்த்தி தன் படைகளோடு சென்று அவனுக்குத் துணையாக இருந்து, வெற்றி வாங்கிக் கொடுத்தான். அந்தச் சமயத்தில்தான் தியாக ராசப் பெருமானை அவன் இந்திரனிடத்திலிருந்து பெற்றான் என்று திருவாரூர்த் தல புராணம் சொல்கிறது. "சண்டையில் நீ எனக்கு உதவி செய்தாய். இன்று நான் பூவுலகத்தில் என் பெண் ணுக்குக் கல்யாணம் பண்ணுகிறேன். நீ வந்து உதவி செய்ய வேண்டும்' என்று இந்திரன் முசுகுந்த சக்கரவர்த்திக்கு ஒலை அனுப்பினான். நாம் மனித உடம்பும், குரங்கு மனமும் படைத்திருக்கிறோம். முசுகுந்த சக்கரவர்த்தி குரங்கு போன்ற முகத்தையும், மனிதர் களைப் போன்ற உடம்பையும் படைத்தவன். அப்படிப் படைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. கைலாசச் சோலையில் பரமேசுவரன் பார்வதியோடு பேசிக் கொண்டிருந் தான். அவர்கள் இருந்த இடத்தில் வில்வ மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் மேல் குரங்கு ஒன்று விளையாடிக் கொண் டிருந்தது. சிவபெருமானும் அம்மையும் பேசிக் கொண்டிருப் பதைக் கண்டு அவர்களுக்குப் பூசை செய்வதுபோல அது வில்வத்தைப் பறித்து ஒவ்வொன்றாகப் போட்டது. அம்மைக்குச் சிறிது கோபம் வந்தாலும், சிவபெருமான் அதை அடக்கி, 'பக்தி யினாலே அந்தக் குரங்கு நமக்கு அர்ச்சனை செய்கிறது” என்று சொல்லி, வில்வத்தால் அர்ச்சனை செய்பவன் மகா சக்கரவர்த்தி யாவான் என்பற்கிணங்கப் பூலோகத்தில் பெரிய சக்கரவர்த்தியாக இருப்பாய் என்று அருள் செய்தான். சிவபெருமான் அருளியதைக் கேட்டு அந்தக் குரங்குக்கு மகிழ்ச்சி உண்டாகவில்லை. அம்மை அப்பனின் காலில் வீழ்ந்து வணங்கி, ‘எம்பெருமானே! நான் என்ன பிழை செய்தேன்? எதற்காக என்னை இப்படிச் சபித்தீர்கள்? இங்கே தினந்தோறும் தேவரீரைத் தரிசனம் பண்ணிக் கொண்டிருந்தேன். உங்களை 70