பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 என்கிற உண்மை புலனாயிற்று. இனி நாமும் தவம் செய்து அருளாகிய கவசத்தைப் பெற வேண்டும். இந்த வசிட்டர் திரு வாக்கினால் பிரம்ம ரிஷி என்ற பட்டத்தைப் பெற வேண்டும். என்று உறுதிபூண்டு பலகாலம் தவம் செய்தான்; பின்பு வெற்றி பெற்றான். அவனே விசுவாமித்திர முனிவர் ஆனான். எந்தக் படையையும் தம் கையில் வைத்திராத முனிபுங்கவருக்கு ஆண்ட வனுடைய அருளாகிய கவசம் துணைநின்றது. அதுபோல் யமன் விடுகின்ற ஆயுதங்களினின்றும் பாதுகாத்துக்கொள்ள அஞ்சேல் என நமக்கு முருகப் பெருமானின் அருளாகிய கவசம் உதவும் என்று அருணகிரியார் சொல்கிறார். எங்கே அணிவது? ண்டவனது அருளாகிய கவசம் என்னிடத்தில் இருக்கிறது. என்று அருணகிரியார் சொல்கிறாரே, கவசம் என்பது மார்பிலும் உடம்பிலும் அணிவது அல்லவா? அருளாகிய கவசத்தை எங்கே அணிந்திருப்பார்கள்?' என்று கேள்வி போடலாம். பகைவன் வேல் எடுத்துப் போரிடுகிறான்; வில் எடுத்துப் போரிடுகிறான். அந்த வில்லினின்றும், வேலினின்றும் பாதுகாத்துக்கொள்ள இரும்பினால் கவசம் தரித்துக் கொள்கிறார்கள். மார்பிலே குத்துவான் என்றால் மார்பில் கவசம் அணிந்து கொள்வார்கள். எதிரியின் ஆயுதம் எங்கே தாக்குமோ அங்கே கவசத்தை தரித்துக் கொள்வார்கள். யமன் பாசம், அங்குசம் முதலியவற்றைக் கொண்டு வருவானே என்ற பயம் எங்கே தோன்றுகிறது? உள்ளத் தில் தோன்றுகிறது. ஆகவே உள்ளத்தில் ஆண்டவனுடைய அரு ளாகிய கவசத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும். இறைவன் . நமக்குத் துணை இருக்கிறான் என்ற நம்பிக்கை அருளால் உண் டாகும். உள்ளத்தில் உண்டாகிற நம்பிக்கையை அணிந்துகொள்ள வேண்டும். அது கவசமாகப் பயன்படும். 'அஞ்சுவதும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை” என்று அப்பர் சுவாமிகள் சொன்னார். அப்படிச் சொல்வதற்குரிய திண்மை அவருக்குக் கவசமாக இருந்தது. ஆண்டவனுடைய திருவருளே அந்தத் திண்மையை உண்டாக்கும். இங்கே அருண கிரியார் யமனால் வருகிற துன்பத்தைப் போக்குவதற்குத்தக்க பாதுகாப்பு இறைவனுடைய அருளாகிய கவசம் என்று சொல்கிறார். 96